கோலார் தங்க வயல் கதையை அடிப்படையாக கொண்டு 1800 ம் ஆண்டின் காலக் கட்டத்தில் நடைபெறுவதாக திரைக்கதை அமைத்து பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிருவனமுடன் இணைந்து பா ரஞ்சித் தின் நீலம் தயாரிப்பு நிறுவனமும் தயாரித்து வருகிறது.
3D தொழில்நுட்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இப்படத்தில் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய செல்வா. RK படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டே இருக்கும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டார். இதில் சியான் விக்ரம் அவர்களுடன் பணியாற்றும் அனுபவம் குறித்து கேட்கையில் அவர்,
"மேற்கத்திய நாடுகளில் என்னுடைய நடிப்பு இயல்பானதாக இருக்கும். அது கதைக்கருவை பொறுத்து மாறுபடும்.. ஆனால், இங்கு வரும்போது, ஒரு குறிப்பிட்ட நாடகத்தன்மை நடிப்பில் இருக்கின்றது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் அதீத நடிப்பு எற்று இல்லை. ஆனால் நான் ஒவ்வொரு முறையும் அந்த நடிப்பில் ஒரு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
தங்கலான் படப்பிடிப்பு முதல்நாளில் ரஞ்சித், "என்ன? எனக்கு இன்னும் அதிகமாக கொடு.. எனக்கு பெரிதாக வேண்டும்.. உடல் ரீதியாக நடிப்பை அதிகமாக கொடுங்கள்.. ' என்றார். நான் வழக்கமான அமெரிக்க பாணியை செய்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால் ரஞ்சித் சொல்வது சரியானது தான்.. எனது நடிப்பு அவர் முயற்சிக்கும் படத்திற்கானது அல்ல என்று.. விக்ரம், அவர் எல்லா நேரமும் ஈடுபாடுடன் இருக்கிறார். ஏதாவது சரி இல்லை என்றால், அவர் மிக விரைவாக மாற்றியமைத்து அதனை மேம்படுத்துவார். எனவே, விக்ரம், நீங்கள் கூறியது போல், அவர் இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். காட்சியின் வழியாக தனது வழியை உணர்ந்து சரியானதை பார்ப்பதில் அவர் மிகவும் திறமையானவர். எதாவது தவறாக நடந்தால், அவர் சொல்வார், ‘அதை மாற்றியமைப்போம்', நான் இந்த பயணத்தில் செல்ல விரும்பினேன், ரஞ்சித்தை அங்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப் போகிறேன். நான் எதையாவது தெரிவிக்க முயற்சி செய்யவில்லை.. நான் என்ன சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? ஒரு குறிப்பிட்ட பாணி என்று இல்லாமல் அதற்கு மாறாக, நான் கதாபாத்திரத்தின் உண்மையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதுதான் எனது நோக்கம், அதுவே எனது குறிக்கோள். நாங்கள் அதைப் பற்றி விரிவாகப் பேசவில்லை. ஆனால், விக்ரம் எப்போதும் என்னிடம் சொல்வார், 'அந்த நிகழ்வில் எதையாவது புதிதாக கண்டுபிடிப்பது எனக்கு பிடிக்கும், அவர் மிகவும் நல்லவர். அவர் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்." என்றார் டேனியல் கால்டாகிரோன்.
மேலும் பிரபல ஆங்கில நடிகர் டேனியல் கால்டாகிரோன் தங்கலான் திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த முழு வீடியோ இதோ..