பத்து தல படத்தில் சிலம்பரசன்TRக்கு ஜோடி இல்லாததால் இது மிஸ் ஆயிடுச்சு... KEஞானவேல் ராஜாவின் கலக்கலான பதில் - கலகலப்பான வீடியோ இதோ!

பத்து தல படத்தில் சிலம்பரசன்TRக்கு ஜோடி குறித்து பேசிய KEஞானவேல் ராஜா,ke gnanavel raja about pair of silambarasan tr in pathu thala movie | Galatta

கம் பேக் கொடுத்தால் இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அதிரடியான கம் பேக் கொடுத்து ஒட்டு மொத்த திரையுலகையும் ரசிகர்களையும் மிரள வைத்தவர் சிலம்பரசன்.TR. ரெட் கார்டு... ஷூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை... சரியான ஒத்துழைப்பு இல்லை... உடல் மிகவும் பருமனாக இருக்கிறது என அடுக்கடுக்காக எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த போதும் அத்தனையையும் தகர்த்தெறிந்து தான் ஒரு சிறந்த நடிகன்… வெற்றி நாயகன் என நிரூபிக்கும் வகையில் மாநாடு திரைப்படத்தில் மக்களை மகிழ்வித்து மாபெரும் வெற்றியை ருசித்தார் சிலம்பரசன்.TR. இதனைத் தொடர்ந்து தனது ஒவ்வொரு படங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வரும் நடிகர் சிலம்பரசன்.TR தனது அடுத்த படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விரைவில் வெந்து துணிந்தது காடு 2 திரைப்படமும் தயாராகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் சிலம்பரசன் நடிக்க இருக்கிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது 48வது படமாக தயாராகும் STR48 திரைப்படத்தை துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார் என்று அதிகாரப்பூர் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வரிசையில் முன்னதாக சிலம்பரசன்.TR நடிப்பில் பக்கா மாஸ் படமாக தயாராகி உள்ள திரைப்படம் பத்து தல. கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற மஃப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக ஜில்லுனு ஒரு பாடல் மற்றும் நெடுஞ்சாலை படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் பத்து தல திரைப்படத்தில், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரித்துள்ள பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் பத்து தல படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்களிடம்,

“பத்து தல பட்த்தில் சிலம்பரசன்TR அவர்களுக்கு ஜோடி இல்லாததால் அவர் மிகவும் வருத்தப்படட்டாரே?” எனக் கேட்டபோது, “ஆமாம் ஆன்ட்டிக்கே (சிலம்பரசன்TRன் அம்மா உஷா ராஜேந்தர் அவர்கள்) வருத்தம்... ஜில்லுனு ஒரு காதல் படம் ரிலீஸ் ஆகி அடுத்த மூன்றாவது நாளில் அண்ணா (சூர்யா) - அண்ணி (ஜோதிகா) கல்யாணம்... அதன் பிறகு சாயிஷா மற்றும் ஆர்யா (கஜினிகாந்த் படத்திற்கு பின்), பின்னர் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் அதுவும் நம்ம படம் தான் தேவராட்டம்... ஆன்டிக்கு அதுதான் வருத்தம்… “என்னப்பா ஜோடி இல்லாமல் கொண்டு வந்துட்டியே, உன் படம் முடிவதற்குள் சிம்புவுக்கு கல்யாணமாகி விடும் என்று நினைத்தேனே என்றார்…” சரி இன்னொரு படம் பண்ணிடுவோம் என்றேன்…” என சிரித்துக் கொண்டே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் பதில் அளித்தார் கலகலப்பான அந்த முழு வீடியோ இதோ…
 

செல்போன் வால்பேப்பரில் SSராஜமௌலி.. காரணம் என்ன? உண்மையை உடைத்த பத்து தல தயாரிப்பாளர் KEஞானவேல் ராஜா! வீடியோ உள்ளே
சினிமா

செல்போன் வால்பேப்பரில் SSராஜமௌலி.. காரணம் என்ன? உண்மையை உடைத்த பத்து தல தயாரிப்பாளர் KEஞானவேல் ராஜா! வீடியோ உள்ளே

பொன்னியின் செல்வன் 2 பட செம்ம ட்ரீட்… மனதை மயக்கும் முதல் பாடலாக வந்த ரம்மியமான அக நக லிரிக் வீடியோ இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட செம்ம ட்ரீட்… மனதை மயக்கும் முதல் பாடலாக வந்த ரம்மியமான அக நக லிரிக் வீடியோ இதோ!

'இதுவரை பார்த்த சிலம்பரசன்TRன் படங்களிலேயே உச்சகட்ட ஹீரோயிசம்!'- பத்து தல படத்தின் மாஸ் குறித்து பேசிய KEஞானவேல் ராஜாவின் சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

'இதுவரை பார்த்த சிலம்பரசன்TRன் படங்களிலேயே உச்சகட்ட ஹீரோயிசம்!'- பத்து தல படத்தின் மாஸ் குறித்து பேசிய KEஞானவேல் ராஜாவின் சிறப்பு பேட்டி இதோ!