மாயாஜாலங்களை தொடங்கிய ARரஹ்மான்...வேகமெடுக்கும் பொன்னியின் செல்வன் 2 இசைப் பணிகள்! அட்டகாசமான அறிவிப்பு இதோ

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 இசைப் பணிகள் ஆரம்பம்,mani ratnam and a r rahman at london for Ponniyin selvan 2 bgm works | Galatta

காலத்தால் அழியாத அற்புத படைப்பாக புகழ்பிக்க எழுத்தாளர்கள் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவல் இன்று வரை பல கோடி வாசகர்களின் ஃபேவரட் நாவலாக திகழ்கிறது. கற்பனைக்கெட்டாத வரலாற்று புனைவு நாவலாக மக்கள் மனதை வென்ற இந்த பொன்னியின் செல்வன் நாவலை திரை வடிவமாக எத்தனையோ ஜாம்பவான்கள் முயன்றும் நிறைவேறாமல் போன நிலையில் இடைவிடாது முயற்சி செய்து கனவை நனவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க பிரம்மிப்பின் உச்சமாக தயாராகி வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிலேயே ஆல் டைம் ரெகார்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி படமாக மக்களால் கொண்டாடப்பட்டது.

ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு  திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ளனர். முன்னணி கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். முதல் பாகத்தை திரையரங்குகளில் கொண்டாடிய ரசிகர்கள் இரண்டாவது பாகத்திற்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலாக அக நக எனும் மனதை வருடும் ரம்யமான பாடல் இன்று மார்ச் 20 ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தது.

இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அட்டகாசமான புதிய அறிவிப்பு ஒன்றை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இன்று மாலை ஆறு மணி அளவில் அக நக பாடல் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்த சமயத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் இருவரும் லண்டனில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கான பின்னணி இசைப் பணிகளை செய்து வருவதாக குறிப்பிட்டு பின்னணி இசைப்பணியில் ஈடுபட்டிருக்கும் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

While we enjoy #AgaNaga #RuaaRuaa #Aaganandhe #Akamalar #Kirunage ,
Director #ManiRatnam and @arrahman are busy creating magic for the BGM of #PS2 ! 🎵#PS2FromApril28 🔥

📍Abbey Road Studios, London#PonniyinSelvan2 @madrastalkies_ @LycaProductions @tipsofficial @bagapath pic.twitter.com/k07NN7gOWU

— Lyca Productions (@LycaProductions) March 20, 2023

பொன்னியின் செல்வன் 2 பட செம்ம ட்ரீட்… மனதை மயக்கும் முதல் பாடலாக வந்த ரம்மியமான அக நக லிரிக் வீடியோ இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட செம்ம ட்ரீட்… மனதை மயக்கும் முதல் பாடலாக வந்த ரம்மியமான அக நக லிரிக் வீடியோ இதோ!

'இதுவரை பார்த்த சிலம்பரசன்TRன் படங்களிலேயே உச்சகட்ட ஹீரோயிசம்!'- பத்து தல படத்தின் மாஸ் குறித்து பேசிய KEஞானவேல் ராஜாவின் சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

'இதுவரை பார்த்த சிலம்பரசன்TRன் படங்களிலேயே உச்சகட்ட ஹீரோயிசம்!'- பத்து தல படத்தின் மாஸ் குறித்து பேசிய KEஞானவேல் ராஜாவின் சிறப்பு பேட்டி இதோ!

'இவ்வளவு பெரிய ஹீரோ ஒரு குழந்தை தான்!'- சிலம்பரசன்TRன் குணம் குறித்து பேசிய பத்து தல பட தயாரிப்பாளர் KEஞானவேல் ராஜா! வீடியோ இதோ
சினிமா

'இவ்வளவு பெரிய ஹீரோ ஒரு குழந்தை தான்!'- சிலம்பரசன்TRன் குணம் குறித்து பேசிய பத்து தல பட தயாரிப்பாளர் KEஞானவேல் ராஜா! வீடியோ இதோ