பிரம்மாண்டமாக உருவாகும் 'சூர்யா 42'.. தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா பகிர்ந்த பட்ஜெட் விவரம்..- ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..

சூர்யா 42 படம் குறித்து தயாரிப்பாளர்  KEஞானவேல் ராஜா விவரம் இதோ -  Producer KE Gnanavel raja shares Suriya 42 updates | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன். தமிழில் மக்கள் கொண்டாடி தீர்க்கும் அட்டகாசமான திரைப்படங்களை இதுவரை கொடுத்து மக்களுக்கும் அந்த நிறுவனத்திற்குமான அந்த நம்பிக்கையை தக்க வைத்திருக்கும் முக்கியமான தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன். அதன்படி சில்லுனு ஒரு காதல், பருத்தி வீரன், சிறுத்தை, சிங்கம், கொம்பன், டார்லிங் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம். தற்போது ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தற்போது சிலம்பரசனின் பத்து தல, விக்ரம் பா ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் மற்றும் சூர்யாவின் பிரம்மாண்ட படமாக உருவாகும் சூர்யா 42 ஆகிய படங்களை தயாரித்துள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா அவர்கள் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த  சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வந்தார்.

இதில் அவர் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் சூர்யா 42 படம் குறித்து கேட்கையில், அவர்  “இதுவரைக்கும் சூர்யா சார் பண்ண படங்களில் அதிக பட்ச பட்ஜெட் படமா இருக்கும் அதாவது 3 மடங்கு அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. வியாபார ரீதியாக 2 மடங்கு அதிகம் உள்ள படம் அது. ரொம்ப ரிஸ்க்கான பட்ஜெட் தான் ஆரம்பித்தோம். எனக்கு என்ன தோனுச்சுனா இன்னிக்கு இருக்கும் சூழல்ல பெரிய பட்ஜெட் படம் பண்ணாதான் நம்ம தொடர்ந்து மக்களிடையே வரவேற்பு இருக்கும். மிகப்பெரிய அளவில் மக்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

இன்னிக்கு கன்னடத்தில் கே.ஜி.எப், தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர் னு வந்தாச்சு..இதுக்கு சவால் விடும் அளவு ஒரு கருவை தேர்ந்தெடுத்து அந்த பட்ஜெட் அளவு ஒரு படம் பண்ணனும் நடந்திட்டு இருக்க முயற்சி தான் இந்த 'சூர்யா 42'. தமிழ் திரையுலகம் பாகுபலிக்கும் ஆர்ஆர்ஆர்  படத்திற்கு பதிலளித்தாக வேண்டும். அதன்படி தான் இந்த படம் உருவாகிட்டு இருக்கு..”  என்றார்.

இதனையடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா சூர்யா 42 திரைப்படம் குறித்த அப்டேட்டுகளுடன் பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

சினிமா

"ஹாய் குந்தவை.." மீண்டும் சூடு பிடிக்கும் பொன்னியின் செல்வன்.. – வந்தியத்தேவன் கார்த்தியின் வைரல் பதிவு இதோ..

‘சூர்யா 42’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் - வைரலாகும் அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

‘சூர்யா 42’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் - வைரலாகும் அட்டகாசமான வீடியோ இதோ..

லோகேஷ் கனகராஜின் LCU ரசிகர்கள் செய்த சிறப்பான தரமான சம்பவம்  – வைரலாகும் அட்டகாசமான சர்ப்ரைஸ் இதோ..
சினிமா

லோகேஷ் கனகராஜின் LCU ரசிகர்கள் செய்த சிறப்பான தரமான சம்பவம் – வைரலாகும் அட்டகாசமான சர்ப்ரைஸ் இதோ..