வெற்றிமாறனின் 'விடுதலை' பட ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு - அட்டகாசமான Glimpse உடன் வைரலாகும் பதிவு இதோ..

விடுதலை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. அதிகாரபூர்வ அப்டேட் இதோ - Viduthalai Release Date announced | Galatta

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விடுதலை. நகைச்சுவை நடிகர் சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கௌரவ வேடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக தயாராகவிருக்கும் விடுதலை படத்தை  RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். படத்திற்கு ஒளிப்பதிவாளர்  R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, R.ராமர் படத்தொகுப்பு செய்கிறார் மேலும் படத்திற்கு சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையில் முன்னதாக வெளியான பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்க இணையத்தில் இன்னும் டிரெண்ட்டிங்கில் உள்ளது.

முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி விடுதலை படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இதுவரை படம் வெளியாகும் தேதியை அறிவிக்காத படக்குழுவினரிடம் ரசிகர்கள் ரிலீஸ் தேதியை கேட்டு நின்றனர். அதன்படி படக்குழு விடுதலை முதல் பாகம் வெளியாகவிருக்கும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் 31 ம் தேதி உலகமெங்கும் விடுதலை முதல் பாகம் வெளியாகவுள்ளது என்பதனை சூரி, விஜய் சேதுபதியின் அட்டகாசமான  போஸ்டருடன் வெளியிட்டுள்ளது படக்குழு. இதனையடுத்து இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

Director #VetriMaaran 's #ViduthalaiPart1 worldwide release on March 31st#ViduthalaiPart1FromMarch31 @ilaiyaraaja Musical@sooriofficial @elredkumar @rsinfotainment @BhavaniSre @VelrajR @DirRajivMenon @menongautham @jacki_art @GrassRootFilmCo @RedGiantMovies_ @mani_rsinfo pic.twitter.com/4bh0c5q43z

— VijaySethupathi (@VijaySethuOffl) March 20, 2023

படமாகும் முதல்வர் முக ஸ்டாலினின் ‘மிசா’ வரலாறு.. இயக்குனராகும் கமல் ஹாசன்  - வைகை புயல் வடிவேலு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

படமாகும் முதல்வர் முக ஸ்டாலினின் ‘மிசா’ வரலாறு.. இயக்குனராகும் கமல் ஹாசன் - வைகை புயல் வடிவேலு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

சினிமா

"ஹாய் குந்தவை.." மீண்டும் சூடு பிடிக்கும் பொன்னியின் செல்வன்.. – வந்தியத்தேவன் கார்த்தியின் வைரல் பதிவு இதோ..

‘சூர்யா 42’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் - வைரலாகும் அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

‘சூர்யா 42’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் - வைரலாகும் அட்டகாசமான வீடியோ இதோ..