தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படம் கோல்ட் மாஃபியாவா..? சுவாரசியமான பதிலளித்த பிரபல இயக்குனர்! வீடியோ இதோ

லியோ படம் கோல்ட் மாஃபியாவா என்ற கேள்விக்கு ரத்னகுமார் பதில்,rathnakumar about thalapathy vijay in leo movie gold wrapped title | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் சக்ரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படமான தளபதி 67 படத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்த தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி லியோ திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வகையில் அட்டகாசமான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து  மேயாத மான், ஆடை மற்றும் குலு குலு ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். முன்னதாக மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களிலும் இயக்குனர் ரத்னகுமார் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ரத்னகுமார் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் லியோ திரைப்படம் குறித்த பல கேள்விகளை கேட்க அவர் சுவாரஸ்யமாக பதிலளித்திருந்தார்.

அந்த வகையில் லியோ திரைப்படத்தை எப்படி எதிர்பார்க்கலாம்? என கேட்டபோது, “உங்கள் எதிர்பார்ப்புகளை எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் அதைவிட பெரியதாக படம் இருக்கும்” என இயக்குனர் ரத்னகுமார் பதிலளித்தது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரிடம் பேசும் போது லியோ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவில் தங்க நிறத்தில் தளபதி விஜயின் பெயர் மற்றும் டைட்டில் ஆகியவை இடம் பெற்று இருப்பதால் லியோ படத்தில் ஒரு பெரிய கோல்ட் மாஃபியாவை மையப்படுத்திய கதைக்களத்தை காட்டப்போகிரீர்களா? என அவரிடம் கேட்டபோது, “இல்லை! நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அது ஒரு சாக்லேட்டின் கவர் போல, கோல்ட் WRAP போல தானே இருந்தது. அந்த டைட்டிலே பார்த்தீர்கள் என்றால் ஒரு சாக்லேட் WRAP தங்க கலரில் இருக்கும் அல்லவா? அது மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள். அப்படித்தானே இருந்தது.” என பதிலளித்துள்ளார். இயக்குனர் ரத்ன குமார் பேசிய அந்த வீடியோ இதோ…
 

உங்க எதிர்பார்ப்பை பெருசா வச்சிக்கோங்க..#Rathnakumar About #LEO 🔥@MrRathna #ThalapathyVijay #LokeshKanagaraj #Kashmir #Galatta pic.twitter.com/d2Ch1C5uAp

— Galatta Media (@galattadotcom) February 12, 2023

சினிமா

"அடுத்த இலக்கு ஒலிம்பிக் தான்!"- தொடரும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்தின் வெற்றி பயணம்... குவியும் பாராட்டுகள்!

சினிமா

"கலை ஜனநாயகத்தின் தூண்!"- குலு குலு படம் மீதான சென்சார் குழுவின் செயலுக்கு இயக்குனர் ரத்னகுமார் கண்டனம்! விவரம் உள்ளே

கோலாகலமாக நடைபெற்ற சர்தார் பட இயக்குனர் PSமித்ரனின் திருமணம்! குவியும் வாழ்த்துகள்
சினிமா

கோலாகலமாக நடைபெற்ற சர்தார் பட இயக்குனர் PSமித்ரனின் திருமணம்! குவியும் வாழ்த்துகள்