தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக அட்டகாசமான விமர்சனங்களை பெற்றதோடு, ரசிகர்களின் பேராதரவால் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்குனர்கள் புஷ்கர் & காயத்ரி இயக்கினர்.

தங்களது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் புஷ்கர் & காயத்ரி கொடுத்த ஓரம்போ மற்றும் வ குவாட்டர் கட்டிங் ஆகிய டார்க் காமெடி திரைப்படங்கள் கவனிக்கும் வகையில் இருந்தாலும் மிகப்பெரிய வரவேற்பும் வெற்றியும் பெற தவறின. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்திய அளவில் அனைவராலும் ரசிக்கப்பட்ட விக்ரம் வேதா திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடிக்க,வேதா கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ளார். மேலும் ராதிகா அப்தே, ரோஹித் சரஃப் மற்றும் ஷரீப் ஹாஷ்மி ஆகியோர் விக்ரம் வேதா படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

PS.வினோத் ஒளிப்பதிவில், விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்திற்கு விஷால் மற்றும் ஷேகர் பாடல்களுக்கு இசையமைக்க, சாம்.CS பின்னணி இசை சேர்த்துள்ளார். Y NOT ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் , Friday Filmworks மற்றும் T-Series Films இணைந்து தயாரித்துள்ள விக்ரம் வேதா திரைப்படம்  வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் விக்ரம் வேதா பாலிவுட் ரீமேக் திரைப்படத்தின் கலக்கலான ஆல்கஹாலியா விடியோ பாடல் சற்று முன்பு வெளியானது. அந்த ஆல்கஹாலியா விடியோ பாடல் இதோ…