தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராகவும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் அஜித்குமார் கடைசியாக நடித்து வெளிவந்த வலிமை திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் AK61 திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.

நேர் கொண்ட பார்வை & வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இணையும் அஜித் குமார் - H.வினோத் - போனிகபூர் - நீரவ்ஷா வெற்றிக் கூட்டணியில் உருவாகும் AK61 திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் புதிய AK62 படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனிடையே தொடர்ந்து தனது பைக் ரைடிங்கில் ஈடுபட்டு வரும் அஜித்குமாரின் பைக் ரைடிங் உலக சுற்றுப்பயணம் குறித்த திட்டங்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகின.

இந்நிலையில் அஜித்குமாரின் பைக் ரைடிங் சுற்றுப்பயணத்தின் போது அவரை நேரில் சந்தித்த அவரது ரசிகர்களிடம் அஜித்குமார் இயல்பாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்கள், “மூன்று நாட்களாக உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்” என கூற அதற்கு அஜித்குமார் சிரித்துக்கொண்டே, “நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?” என பேசிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

#Ajith sir ❤️😍#AjithKumar #AK #AK61 pic.twitter.com/LM6XkYO7qZ

— Ajith Network (@AjithNetwork) September 16, 2022

Wowww... 😍 Never ever give up.. #AK Fans met #AjithKumar sir After long Ride.. துணிவே துணை.. 😎 #AK61 #AK62 pic.twitter.com/PUOy8pwi7K

— கோவை மாவட்ட அஜித் தலைமை செயலகம் (@AjithFc_Cbe) September 17, 2022