மியூசிக் ஆல்பங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் சினிமா பாடல்களை தாண்டி பிரபலமாக இருக்கும்,அப்படி மியூசிக் ஆல்பங்கள் மூலம் பலரும் தங்கள் திறமையை நிரூபித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக மாறியுள்ளனர்.அப்படி மியூசிக் ஆல்பங்களில் பணியாற்றிய பலரும் திரைத்துறையில் சாதித்தும் உள்ளனர்.

காலப்போக்கில் மியூசிக் ஆல்பங்களை தாண்டி மியூசிக் வீடியோக்கள் ரசிகர்களின் கவனம் பெறத் தொடங்கின.இதன் மூலம் பிரபலங்கள் சுலபமாக உருவெடுக்க தொடங்கினர்.அப்படி சமீபத்தில் வெளியான குட்டி பட்டாஸ்,என்ஜாய் எஞ்சாமி,அஸ்கு மாறோ,ஹே சிங்காரி உள்ளிட்ட பல மியூசிக் ஆல்பங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்திருந்தன.

அருள்ராஜ் இசையமைத்த இந்த பாடலை இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.மைக்செட் ஸ்ரீராம்,அபூர்வா ராவ்,அனன்யா ராவ் உள்ளிட்டோர் இந்த மியூசிக் வீடியோவில் தோன்றி பிரபலமாக மாறினர்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்தது.இந்த பாடலில் நடித்துள்ள அபூர்வா இன்ஸ்டாக்ராமி மிகவும் பிரபலமான மாடல்களில் ஒருவர்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பவர் அபூர்வா.இந்த பாடலின் நாயகியாக வருபவர்களில் ஒருவரான அபூர்வா,தனக்கு விரைவில் அஜய் என்பவருடன் திருமணமாகவுள்ளதை சமீபத்தில் அறிவித்தார்.தற்போது இவருக்கும் அஜய்க்கும் திருமணம் நடைபெற்றுள்ளது , இதுகுறித்த வீடீயோவை அவரது தங்கை அனன்யா பகிர்ந்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.