கள்ளக் காதலனுடன் உல்லாசமாக வாழ ஆசைப்பட்ட மனைவி, தனது கணவரின் கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கராய கொண்ட மண்டலம் தேவர பள்ளி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பாரா மற்றும் அவரது மனைவி வெங்கடேஸ்வரம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இந்த தம்பதிக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கு 2 மகன்கள் தற்போது உள்ளனர். 

இப்படியான சூழலில் தான், கணவன் சுப்பாராவும் அவரது மனைவி வெங்கடேஸ்வராம்மாவும் ஐதராபாத்துக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.

இப்படியான சூழ்நிலையில்தான், வெங்கடேஸ்வராம்மாவுக்கு ஐதராபாத்தை சேர்ந்த சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. மனைவியின் கள்ளக் காதல் விசயம், அவரது கணவன் சுப்பாராவுக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவி வெங்கடேஸ்வராம்மாவை கண்டித்துவிட்டு, அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். 

இதனால், கள்ளக் காதலுடன் சேர்ந்து வாழ முடியாமல் அவர் தவித்துப் போனார். 

இது தொடர்பாக யோசித்த அவரது மனைவி, “தனது கணவரைக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்யத் திட்டம்” தீட்டி உள்ளார். 

திட்டமிட்டபடி, “இரவில் கணவன் சுப்பாராவ் தூங்கிக் கொண்டிருந்த போது, கள்ளக் காதலன் சதீஷை தனது வீட்டிற்குள் வர வைத்த அவரது மனைவி வெங்கடேஸ்வராம்மா, நள்ளிரவு நேரத்தில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த கணவன் சுப்பாராவின் கழுத்தைக் கயிற்றால் கட்டி இறுக்கி, அவரை கொலை செய்ய முயன்று உள்ளார்.

அப்போது, சட்டென்று சுதாரித்துக் கொண்ட சுப்பாராவ், கூச்சலிட்டு சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை பத்திரமாக மீட்டு உள்ளனர்.

அப்போது, அவரது மனைவி வெங்கடேஸ்வரம்மாவும், கள்ளக் காதலன் சதீஷ் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

இதனையடுத்து, இது தொடர்பாக சுப்பாராவ் சிங்கராயகொண்ட காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர் மனைவி பயன்படுத்திய செல்போன் சிக்னல் உதவியுடன், ரயிலில் தப்பித்துச் செல்ல முயன்ற கள்ளக் காதலன் சதீஸ் - வெங்கடேஸ்வரம்மாவை ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.