கடாரம் கொண்டான்  படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் மஹான்,பொன்னியின் செல்வன்,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்த மூன்று படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் நிறைவு செய்தார் சீயான் விக்ரம்.

மஹான் படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்த படத்தில் இவருடன் இணைந்து இவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் அறிவிப்பின் முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா,வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடித்துள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த பர்ஸ்ட்லுக் அறிவிப்பை ஒரு அறிவிப்பு வீடியோவாக வெளியிட்டனர்.விக்ரமின் கெட்டப்புடன் இந்த வீடியோ பெரிய வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்தில் துருவ் விக்ரமின் அறிவிப்பு வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.