பணக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்தவரை, அந்த பெண்ணின் உறவினர்களால் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் உள்ள கடடா தாலுகாவில் இருக்கும் லிம்பாலி என்னும் பகுதியில் வசித்து வந்த 25 வயதான ஜெய்சுக் என்ற இளைஞர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அந்த நபர், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். 

அந்த பெண்ணும், இந்த இளைஞரை காதலித்து வந்த நிலையில், இருவரும் சில காலம் காதலர்களாக அந்த பகுதியில் வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் தான், மிகவும் வசதியான அந்த பெண்ணின் வீட்டிற்கு, இவர்களது காதல் விவகாரம் தெரிய வந்தது. 

ஆனால், அந்த காதலன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், இளம் பெண்ணின் காதலை தெரிந்துகொண்ட அவரது குடும்பத்தினர், கடும் அதிர்ச்சியடைந்து மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த இளைஞன் ஜெயசு, தனது காதலியை அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்குத் தெரியாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், அதன் பிறகும் அவர்களது திருமணத்தை அந்த பெண்ணின் உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், காதல் திருமணம் செய்துகொண்ட இருவரம் தனித் தனியாக வாழ்ந்து வந்தனர்.

இப்படியான சூழ்நிலையில், இவர்கள் பிரிந்து வாழும் விசயம் அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் உறவினர்களுக்குத் தெரிய வந்த நிலையில், இளைஞன் ஜெயசுக், தங்கள் வீட்டு பெண்ணை ஏமாற்றிக் கூட்டிச் சென்று திருமணம் செய்து கழற்றிவிட்டு விட்டார் என்று அவர் மீது மிக கடுமையான கோபத்தில் இருந்து உள்ளனர்.

இந்த கோபம் ஒரு கட்டத்தில் அவரை கொலை செய்யும் அளவுக்குச் சென்று உள்ளது.

இந்த நிலையில், ஜெய்சுக் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று அங்குள்ள இடரியாவிலிருந்து லிம்பாலிக்குச் சென்று உள்ளார். அப்போது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவர் கடத்தப்பட்டு உள்ளார்.

கடத்தலில் ஈடுபட்ட  4 பேரும், காதல் மனைவியின் உறவினர் என்பதை தெரிந்துகொண்டு, தங்களது பிரிவுக்கு காரணத்தைக் கூறியிருக்கிறார்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த அவர்கள், அந்த இளைஞனை மிக கடுமையாகத் தாக்கிவிட்டு, அவரை கத்தியால் துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். 

அப்படியும் அந்த இளைஞர் சாகாமல் தனது உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்ததால், அவர் மீது காரை ஏற்றி, மிகவும் கொடூரமான முறையில் அவரை கொலை செய்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்று உள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும், கொலை செய்த 4 பேர் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைக்கவே, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.