“தமிழக பாஜகவின் முன்னாள் பொதுச் செயலாளர் கே. டி. ராகவன் மீது ஆபாச வீடியோ தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன், அவரது கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக வீடியோ காலில் பேசுவது போன்றும், அப்படி பேசிக்கொண்டே சுய இன்பம் மேற்கொள்வது போன்று” ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 கே.டி. ராகவன் தொடர்பான இந்த ஆபாச வீடியோ விவகாரம், தமிழக பாஜகவில் மட்டுமில்லாமல், இந்திய அளவிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

 கே.டி. ராகவன் தொடர்பான வீடியோவை வெளியிட்ட பத்திரிகையாளர் மதன், “கே.டி. ராகவன், மட்டுமல்லாமல் இன்னும் 15 தமிழக பாஜக நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட சுமார் 60 வீடியோக்கள் என்னிடம் இருப்பதாகவும்” மதன் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

மதனின் இந்த வீடியோ தமிழக அரசியலில் மிகப் பெரிய பூகம்பத்தை உண்டு பண்ணியது. இது பெரும் விவாத பொருளமாகவும் தமிழக அரசியலில் மாறிப்போனது.

இந்த நிலையில் தான், “தமிழக பாஜகவின் முன்னாள் பொதுச் செயலாளர் கே. டி. ராகவன் ஆபாச வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டு என்று, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்து உள்ளார்.

அந்த புகார் மனுவில், “இந்துக்களைப் புண்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார், கே.டி. ராகவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.

அதே போல், “ஆபாச வீடியோ வெளியிட்ட யூடியூபர் மதன் ரவிச்சந்திரன், இந்துக்களை அமைப்பு அவமதிக்கும் வகையில் செயல்பட்ட கே.டி.ராகவன் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், காவல் ஆணையரிடம் பியூஸ் மனுஷ் தனது புகார் மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

இதனால், கே.டி.ராகவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனு தொடர்பான செய்திகள், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.