லிங்குசாமி படத்தில் வில்லனாக பிரபல தமிழ் நடிகர்! அசத்தலான புது போஸ்டர்
By Anand S | Galatta | March 01, 2022 18:48 PM IST
தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி நடிகர்கள் மம்முட்டி மற்றும் முரளி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தி நடிகர் மாதவன் நடிப்பில் ரொமான்டிக் ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த ரன் திரைப்படம் மெகா ஹிட்டானது.
இதையடுத்து லிங்குசாமியின் இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி, சீயான் விக்ரம் நடித்த பீமா, கார்த்தி நடித்த பையா மற்றும் மாதவன் & ஆர்யா இணைந்து நடித்த வேட்டை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் ஆனது. கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த அஞ்சான் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
இந்த நிலையில் தனது கம்பேக் திரைப்படமாக இயக்குனர் லிங்குசாமி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்க தி வாரியர் படம் தயாராகி வருகிறது. முன்னணி தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, காவல் துறை அதிகாரியாக, கதாநாயகனாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் தி வாரியர் படத்தில் மிரட்டலான வில்லனாக நடிகர் ஆதி நடிக்க, அக்ஷரா கௌடா மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் தி வாரியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தி வாரியர் படத்தில் குரு என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆதியின் புதிய போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டர் இதோ…
Meet GURU from #TheWarriorr ! @AadhiOfficial you Monster!! Haha..can’t wait for them to witness your career best performance brother!
— RAm POthineni (@ramsayz) March 1, 2022
Happy #MahaShivaratri my people.
Love..#RAPO pic.twitter.com/uuWEMxrRCR