ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் அடுத்து உள்ள துறையூர் பகுதியை சேர்ந்த 65 வயதான பெரியசாமி என்பவர், அந்த பகுதியில் விவசாய வேலைகளை பார்த்து வந்தார். 

இந்த சூழலில் தான், இவருடைய மகன் வேல்முருகன் என்வர், அந்த பகுதியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். 

வேல்முருகனுக்கு 26 வயதான மனைவி அம்பிகா உள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில் தான், மருமகள் அம்பிகாவின் மாமனரான பெரியசாமி, மருமகள் மீது சற்று சபலப்பட்டு உள்ளார்.

இதனால், கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மருமகள் அம்பிகாவின் கையை பிடித்து இழுத்து அவரை ஆசைக்கு இணங்குமாறு, பெரியசாமி கூறியதாக தெரிகிறது.

அதனால், கடும் அதிர்ச்சியடைந்த அம்பிகா, கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாமனாரின் ஆசைக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த பெரியசாமி, தங்களது வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் மருமகளை மிக கடுமையாக தாக்கி உள்ளார்.

இதில், பலத்த காயம் அடைந்த அம்பிகா, நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கருமலைக்கூடல் போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், மருமகளை கொலை செய்த மாமனார் பெரியசாமியை அதிரடியாக கைது செய்தனர். 

அத்துடன், இந்த கொலை வழக்கு சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. இந்த வழக்கில், போலீசார் சார்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

மேலும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், இது தொடர்பான விசாரணை அனைத்தும் முழுமையாக முடிவடைந்ததால், தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி, மருமகளை கொன்ற மாமனார் பெரியசாமிக்கு நீதிமன்றம் அதிரடியாக ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கில் ஆயுள் தண்டனையுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற உத்தரவின் பேரில் பெரியசாமியை போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.