தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் தயாராகியுள்ள வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தினை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கியுள்ளார்.இதற்கு முன் இதே கூட்டணியின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துளளார்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் விமர்சகர்களிடமும் சுமாரான முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் நீளம் 14 நிமிடங்கள் குறைக்கப்பட்டது.தற்போது அதிலிருந்து ஒரு முக்கிய காட்சியை படக்குழுவினர் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளனர்.ஹுமா குரேஷியுடன் அஜித் உரையாடும் காட்சி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்