ரஷ்யா - உக்ரைன் போர் உச்சம் பெற்றிருக்கும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைனுக்கு ஆதரவு தருவதுடன், ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் எவை என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

ரஷ்யா - உக்ரைன் போர் புதிய உச்சம் பெற்றிருக்கும் நிலையில், தற்போது 5 வது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. 

முக்கியமாக, அதிக போர் தளவாடங்களை கொண்டு உலக அளவில் 2 ஆம் இடத்தில் உள்ள ரஷ்யாவிற்கும், 22 வது இடத்தில் உள்ள உக்ரைனுக்கும் தான் இந்த போர் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், இதில் உக்ரைனே மிக அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், உக்ரைனக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளும் தங்களது போர் தளவாடங்களை கொடுத்து, உக்ரைனுக்கு ஆதரவாக நிற்பதால், ரஷ்யாவும் பல்வேறு விதங்களில் நெருக்கடி தரும் வகையில், பொருளாதார தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், ரஷ்யா பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

அந்த வகையில், இந்த போரில் உக்ரைன் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு வேறொரு வகையில் ரஷ்யாவும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இழப்பு குறித்து, நேற்று முன் தினம் ரஷ்ய அதிபர் ஒற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் அதிக இழப்புகளை சந்தித்து வரும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் துணை நின்று வருகின்றன.

அதன்படி பார்க்கும் போது, உக்ரைனுக்கு ஆதரவாக உலக வல்லரசில் நம்பர் ஒன் நாடாக இருக்குமு் அமெரிக்கா, தனது முதல் ஆதரவைத் தெரிவித்து, ஆயுதங்களை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சயாக, நெதர்லாந்து உட்பட பல்வேறு உலக நாடுகளும் தங்களது ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுத்து உதவி வருகின்றன.

இந்த ஆயுதங்களை தற்காப்பு ரீதியாக உக்ரைனுக்கு கொடுப்பதாகவும், உதவி செய்து வரும் உலக நாடுகள் கூறுகின்றன. 

குறிப்பாக, இந்த போரினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, ஜெர்மனியும் தனது ஆதரவு கரத்தை நீட்டி உள்ளது.

அந்த வகையில், ஜெர்மனி நாடானது, “ஆண்டி டேங்க் மிசைல், ஏர் டிபன்ஸ் கன்ஸ், 14 பாதுகாப்பு வாகனங்களை” உக்ரைனுக்கு அனுப்பி வைத்து உள்ளது. 

மேலும், “ஆயிரம் ஆண்டி டேங்க் ஆயுதங்கள் மற்றும் தரையிலிருந்து தாக்கும் 500 ஸ்ட்ரிங்கர் மிசைல்களையும்” ஜெர்மனி அனுப்புகிறது. 

அத்துடன், “400 ஆர்.பி.ஜி. ஆயுதங்களையும் ஜெர்மனி அனுப்புகிறது. 

இதற்காகவே, “வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில்லை” என்கிற கொள்கையையும் ஜெர்மனி மாற்றி அமைக்க முடிவு எடுத்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, உலக வல்லரசான அமெரிக்க, “350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுக்க” முன்வந்து உள்ளார்.

அந்த வகையில், “ஜாவ்லின் ஆண்டி டேங்கர் ஆயுதம், வானூர்திகளை தாக்கும் ஸ்ட்ரிங்கர் மிசைல் மாதிரியான அதிநவீன ஆயுதங்களையும்” அமெரிக்கா அனுப்புகிறது.

அதே போல், ரஷ்ய படைகளை தடுக்க இங்கிலாந்து சார்பில் “ஆண்டி டேங்க் ஆயதங்களை உக்ரைனுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்து உள்ளது. 

கடந்த மாதம் கூட, “உக்ரைனுக்கு 1000 NLAW ஆண்டி ஆர்மர் சிஸ்டங்களை” இங்கிலாந்து அனுப்பி உள்ளது. 

மேலும், தங்கள் நாட்டு போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தற்போது முன் வந்து உள்ளன.

அந்த வரிசையில், பின்லாந்து “2500 துப்பாக்கிகள், 150000 தோட்டாக்கள், 1500 ஆண்டி டேங்க் ஆயுதங்களுடன் உணவுகளையும் அனுப்பி வைத்து உள்ளது. 

அதே போல், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டு ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுக்க தற்போது முன் வந்து உள்ளன.

அதன்படி, பெல்ஜியம் “2000 மெஷின் கன்கள் மற்றும் 3800 டன் எரிபொருளை” வழங்க உள்ளது. 

அதே போல், கிரீஸ் நாடு “2 விமானங்கள் முழுவதும் ஆயுதங்களை போலாந்துக்கு அனுப்பி அங்கிருந்து தரை வழியாக உக்ரைன் நாட்டு எல்லைக்குள் அந்த ஆயுதங்கள் கொண்டு செல்லப்படும்” என்றும் தெரிவித்து உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, நார்வே நாடும் ஆயுதங்களை அனுப்பி வைக்க தற்போது உறுதி செய்து உள்ளது.

மிக முக்கியமாக, நெதர்லாந்து சார்பில் “ராக்கெட் மற்றும் ஸ்ட்ரிங்கர் ஆயுதங்களை” அனுப்புகிறது. 

இவை தவிர, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வான் வழியாக ரஷ்யா நாட்டு விமானம் வானில் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.