தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றால் வடிவேலு என்றும் ஒரு அர்த்தம் உண்டு. சினிமாவில் மட்டுமல்லாமல் அனைத்து சமூக வலைதளங்களிலும் மீம்ஸ் வாயிலாக தொடர்ந்து மக்களின் இதயங்களில் என்றும் நகைச்சுவை மன்னனாக அமர்ந்திருப்பவர் தான் வைகை புயல் வடிவேலு.நீண்ட காலமாக வடிவேலுவை திரையில் காண பலகோடி ரசிகர்கள் காத்திருந்த நிலையில், வைகை புயல் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள திரைப்படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ். 

பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரத்தின் பெயரை கொண்டு உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தையும் இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. 

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவின் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முன்னதாக லண்டனில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கான பாடல் கம்போசிங் பணிகள் நடைப்பெற்றது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் அளிக்கும் விதமாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாடல் பாடியுள்ளார் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேலு பாடும் வீடியோவை பதிவிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த வீடியோ இதோ…