சந்திரமுகி 2 படப்பிடிப்பில் வடிவேலுவின் கலக்கல் காமெடி.. - வைப் செய்யும் ராதிகா சரத்குமார்.. வைரல் வீடியோ உள்ளே..

படப்பிடிப்பில் வடிவேலுவின் நகைச்சுவையை பதிவிட்ட ராதிகா சரத்குமார் வீடியோ உள்ளே - Radhika sarathkumar vadivelu hilarious video check here | Galatta

தமிழ் சினிமாவில் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படமாக இருந்து வருவது இயக்குனர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005 ல் வெளியான ‘சந்திரமுகி’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாறுபட்ட கதாபாத்திரத்துடன் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளியான இப்படம் தமிழ் திரையுலக வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட காலம் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியது.

அதன்படி லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் பி வாசு இயக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தில் கங்கனா ரனாவத், லக்ஷ்மி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார், ராதிகா உள்ளிட்டோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய ஆஸ்கர் வென்ற எம் எம் கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ள சந்திரமுகி 2   திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைகை புயல் வடிவேலு வுடன் நடிகை ராதிகா சரத் குமார் ‘ரிஸ்க் எடுக்குறதுலாம் ரஸ்க் சாப்பிட மாதிரி’ என்ற பிரபல வடிவேலு வசனத்தை வடிவேலு பேசி கலகலப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து வடிவேலு ரசிகர்களால் இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவு பகிரப்பட்டு வருகிறது.  சந்திரமுகி 2 படப்பிடிப்பில் ராகவா லாரன்ஸ்,  ராதிகா , வடிவேலு செய்யும் சேட்டைகள் அவ்வப்போது வெளியாகி மிகப்பெரிய அளவு வைரலாவது குறிப்பிடத்தக்கது.

 

Love this cult dialogue of #Vadivelu ,recreating ❤️❤️❤️#comedy #tamilfilm #classic
On the sets of #chandramukhi2 @LycaProductions pic.twitter.com/3T60Ad6wzs

— Radikaa Sarathkumar (@realradikaa) May 27, 2023

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அப்படத்தையடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வடிவேலு மாமன்னன் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்த மாதம் இறுதியில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படதையடுத்து வடிவேலு ரசிகர்களுக்கு பக்கா காமெடி விருந்து கொடுக்க சந்திரமுகி  2 உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சினிமா

"ரசிகருக்கு பிடிக்காதுனு GVM கிட்ட சொன்னேன்.." பச்சைக்கிளி முத்துச்சரம் படம் குறித்து நடிகர் சரத்குமார்..- முழு நேர்காணல் இதோ..

இதுவரை இல்லாத புது ஸ்டைலில் மகேஷ் பாபுவின் SSMB28 பட டைட்டில் ரிலீஸ்... செம்ம மாஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

இதுவரை இல்லாத புது ஸ்டைலில் மகேஷ் பாபுவின் SSMB28 பட டைட்டில் ரிலீஸ்... செம்ம மாஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆதித்ய கரிகாலன் மரணம்.. ரசிகர்களால் வைரலாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மிக முக்கியமான காட்சி..  வீடியோ இதோ..
சினிமா

ஆதித்ய கரிகாலன் மரணம்.. ரசிகர்களால் வைரலாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மிக முக்கியமான காட்சி.. வீடியோ இதோ..