“கண்டிப்பா அவருடன் படம் பண்ணனும்..” லோகேஷ் கனகராஜ் குறித்து டோவினோ தாமஸ்.. - சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு நேர்காணல் இதோ..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து நடிகர் டோவினோ தாமஸ் விவரம் இதோ - Tovino Thomas about Lokesh kanagaraj | Galatta

மலையாள திரையுலகில் இளைஞர்களை தன் எதார்த்த நடிப்பினால் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் டோவினோ தாமஸ். இவர் நடிப்பில் வெளியான பல படங்களை மலையாள திரையுலகை தாண்டி தென்னிந்திய அளவில் அதிகம் பேசப்படும். அதன்படி ‘கோதா’, ‘தரங்கம்’, ‘உயரே’, ‘வைரஸ், ‘தல்லுமலா’, ‘மின்னல் முரளி’ போன்ற பல படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவு பிரபலம். குறிப்பாக மின்னல் முரளி திரைப்படம் மூலம் இவருக்கு இந்திய அளவில் தனி அன்கீகராம் கிடைத்தது.  சொல்லப்போனால் இவருக்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் இவர் நடிப்பில் வெளியான ‘2018’ திரைப்படம் இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மலையாள திரையுலகில் சாதனை படைத்து வருகிறது,  கேரளாவில் கடந்த 2018 ம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளபெருக்கை கதைகருவாக உருவான ‘2018’ திரைப்படம் நேற்று (மே 26)  தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் 2018 திரைப்படம் குறித்தும் அப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் நடிகர் டோவினோ தாமஸ் படக்குழுவினர் கலந்துகொண்டு பகிர்ந்து கொண்டனர்.

இதில் இயக்குனர் லோகேஷ் கணக்ராஜிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ் கால் குறித்து கேட்ட போது, "லோகேஷ் என்னுடைய தல்லுமளா படம் பார்த்து விட்டு எனக்கு தொலைபேசி மூலம் அழைத்தார். நான் அந்த அழைப்பை எதிர்பார்க்கவே இல்லை.. அவரை போன்ற ஒரு கலைஞரிடம் இருந்து வரவேற்பு கிடைத்தால் அது மிகப்பெரிய விஷயம். அவர் பாராட்டுவதற்காக நேரம் ஒதுக்கி பாரட்டியது மதிக்கதக்கது. மின்னல் முரளி படம் பார்த்த பின்பு அவர் என்னிடம் பேசினார்.‌ஆனால் தல்லுமலா படம் பார்த்து ஒட்டுமொத்த குழுவினரையும் பாராட்டினார். தல்லுமலா உருவான விதம் அவருக்கு மிகவும் பிடித்தது என்றார்.” என்றார் டோவினோ தாமஸ். பின் தொடர்ந்து  அவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான தல்லுமலா திரைப்படம் குறித்து பேசுகையில், “எனக்கு அந்த தல்லுமளா படம் குறித்த நம்பிக்கை இருந்தது. நான் பண்ண படங்களில் மிகவும் வித்யாசமான படம் அது.. தொழில்நுட்பம் தாண்டி அந்த படம் அதன் திரைக்கதை உருவான விதம் எல்லோருக்கும் பிடிக்கும்.  மலையாளம் தெரியாமல் அந்த படத்தை பார்த்தால் கூட அனைவருக்கும் புரியும். அது நிலம் சார்ந்த திரைப்படமாக இருந்தது.” என்றார்.

அதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எப்போது படம் நடிக்கவுள்ளீர் என்ற கேள்விக்கு அவர்,  “கண்டிப்பா, அவருடன் வேலை பார்க்க விரும்புகிறேன். ஆனால் அவர் மிகப்பெரிய படங்கள் பண்ணிட்டு இருக்கார். நான் சின்ன சின்ன படங்கள் பண்ணிட்டு இருக்கேன். கண்டிப்பா நடக்கும் னு நினைக்கிறேன்.. “ என்றார் நடிகர் டோவினோ தாமஸ்.

மேலும் நடிகர் டோவினோ தாமஸ் அவர்கள் அவரது திரைப்பயணம் மற்றும் 2018 திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..  

ஐ.பி.எல் இறுதி போட்டியில் மேடையேறும் தளபதி விஜய் பட பாடகி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

ஐ.பி.எல் இறுதி போட்டியில் மேடையேறும் தளபதி விஜய் பட பாடகி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு இதோ..

சினிமா

"ரசிகருக்கு பிடிக்காதுனு GVM கிட்ட சொன்னேன்.." பச்சைக்கிளி முத்துச்சரம் படம் குறித்து நடிகர் சரத்குமார்..- முழு நேர்காணல் இதோ..

இதுவரை இல்லாத புது ஸ்டைலில் மகேஷ் பாபுவின் SSMB28 பட டைட்டில் ரிலீஸ்... செம்ம மாஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

இதுவரை இல்லாத புது ஸ்டைலில் மகேஷ் பாபுவின் SSMB28 பட டைட்டில் ரிலீஸ்... செம்ம மாஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!