வெறித்தனமான Vibe -ற்கு ரெடியா..! ஜெயிலர் படம் குறித்து தமன்னா கொடுத்த அப்டேட்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..

ஜெயிலர் படத்திற்காக நடன பயிற்சியில் தமன்னா அட்டகாசமான அப்டேட் இதோ - Tamannaah Dance rehearsal for jailer movie | Galatta

ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து நிற்கும் திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ திரைப்படம் இருந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரப், தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்க்ஸ்லி, யோகி பாபு, கிஷோர், வசந்த் ரவி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைகின்றார். மேலும் படத்தில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய ஆர் நிர்மல் படத்தொகுப்பு செய்கின்றார்.

படத்தின் அறிவிப்பிலிருந்து இன்று வரை இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் விதத்தில் அவ்வப்போது சிறப்பு காட்சிகள், படம் உருவான விதம் என்று படக்குழு வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜெயிலர் படத்தில் அனிருத் இசையில் உருவாகும் பாடலுக்கான நடன பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் புயலுக்கு முன் அமைதி என்ற வாசகத்தை மாற்றி  “பாடலுக்கு  முன் அமைதி..!” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பொதுவாகவே தமன்னா நடனத்தில் பேர் பெற்றவர். எவ்வளவு வேகமாக கதாநயாகன் ஆடினாலும் அவருக்கு நிகராக தமன்னா நடனமாடுவார் என்பது அவருக்கே உரிய தனி சிறப்பு. உதாரணமாக பிரபு தேவா படமான தேவி படத்தில் சோலோ சாங். அதன்படி ஜெயிலர் படத்தில் அனிருத்தின் வேரித்தனாமன  இசையில்  தமன்னாவிற்கு சோலோ சாங் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ar rahman musical mari selvaraj maamannan movie 2nd single jigu jigu rail released

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான தமன்னா தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார், தற்போது முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இணைந்துள்ளார். இதனாலே இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் தமன்னா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தின் அடுத்த பாடலை வெளியிட்ட படக்குழு.. - மனதை மயக்கும் அட்டகாசமான பாடல் இதோ..
சினிமா

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தின் அடுத்த பாடலை வெளியிட்ட படக்குழு.. - மனதை மயக்கும் அட்டகாசமான பாடல் இதோ..

'செவ்வந்தி' சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை.. தீவிர விசாரணையில் போலீஸ் – விவரம் உள்ளே..
சினிமா

'செவ்வந்தி' சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை.. தீவிர விசாரணையில் போலீஸ் – விவரம் உள்ளே..

போலி தகவல்களை பரப்பாதீர்.. வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த ‘பேட்ட’ பட வில்லன்..! – விவரம் உள்ளே.
சினிமா

போலி தகவல்களை பரப்பாதீர்.. வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த ‘பேட்ட’ பட வில்லன்..! – விவரம் உள்ளே.