மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகராக திகழ்பவர் தளபதி விஜய். அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரிசு. முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகி பிளாக் மாஸ்டர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்க, வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் ஆகியோருடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த சில தினங்களில் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தற்போது தளபதி விஜய் இன்ஸ்டாகிராம் தளத்தில் இணைந்துள்ளார். ஆரம்பமே அட்டகாசம் என சொல்லும் அளவிற்கு மாஸாக என்ட்ரி கொடுத்த தளபதி விஜய் இன்ஸ்டாகிராமிலும் தனது சாதனை பயணத்தை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் இணைந்த மிகக் குறுகிய நேரத்தில் வேகமாக ஒரு மில்லியன் ஃபாலோவர்களை கடந்த நட்சத்திரமாக தளபதி விஜய் தனது முதல் சாதனையை படைத்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கும் குறைவான நேரத்தில் ஒரு மில்லியன் ஃபாலோவர்கள் தளபதி விஜய் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். தென் கொரியாவின் நட்சத்திர இசைக்குழுவான பாய் பேண்ட் BTSன் V, 53 நிமிடங்களிலும் ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, 59 நிமிடங்களிலும் ஒரு மில்லியன் ஃபாலோவர்களை பெற, இவர்களது வரிசையில் இந்திய நடிகர்களிலேயே மிகவும் வேகமாக ஒரு மில்லியனை கடந்த நட்சத்திரமாக விஜய் சாதனை படைத்துள்ளார். மேலும் தான் பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கே 104 நிமிடங்களில் ஒரு மில்லியன் லைக்ஸ் பெற்ற தமிழ் நடிகராக மேலும் ஒரு புதிய சாதனை தளபதி விஜய் படைத்துள்ளார். இந்தியாவிலேயே நடிகர் அல்லு அர்ஜுன் 78 நிமிடங்களில் இந்த சாதனையை படைக்க, அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தளபதி விஜய் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹலோ நண்பாஸ் & நண்பீஸ் என தொடங்கிய தளபதி விஜயின் இன்ஸ்டாகிராம் பதிவு இதோ…