சூர்யா திறந்து வைத்த இயக்குனர் ஹரி - ப்ரீத்தா ஹரியின் குட் லக் ஸ்டுடியோஸ்... பிரம்மாண்ட திறப்பு விழாவின் வீடியோ இதோ!

சூர்யா திறந்து வைத்த இயக்குனர் ஹரி - ப்ரீத்தா ஹரியின் குட் லக் ஸ்டுடியோஸ்,suriya inaugrates director hari and pritha good luck studios | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்த வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் மிக பிரம்மாண்டமான திரைப்படமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தை 10 மொழிகளில் PAN INDIA திரைப்படமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்ற நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த திரைப்படமான சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யாவிற்கு முதல் தேசிய விருதை பெற்றுக் கொடுத்த சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக அக்ஷய் குமார் நடிக்கும் இந்த படத்தையும் இயக்குனர் சுதா கொங்காரா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தற்போது இயக்குனர் ஹரி மற்றும் அவரது மனைவி ப்ரீத்தா ஹரியின் குட் லக் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை திறந்து வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. பிரசாந்த் கதாநாயகனாக நடித்த தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹரி அவர்கள், தனது அடுத்த படமாக சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்த சாமி திரைப்படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டான சாமி திரைப்படத்தை தொடர்ந்து சிலம்பரசன் கதாநாயகனாக நடித்த கோவில் படத்தை இயக்கிய ஹரி மீண்டும் சியான் விக்ரமுடன் இணைந்து அருள் படத்தை இயக்கினார். தொடர்ந்து சரத்குமாரின் ஐயா, சூர்யாவின் ஆறு, விஷாலின் தாமிரபரணி எனத் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த இயக்குனர் ஹரி இயக்கத்தில் மீண்டும் இணைந்த சூர்யா நடிப்பில் வெளிவந்த வேல் திரைப்படம் மெகா ஹிட் ஆனது.

தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் இணைந்து வெளிவந்த சிங்கம் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அதன் தொடர்ச்சியாக சிங்கம் 2 சிங்கம் 3 ஆகிய படங்களையும் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்தது சூர்யா - ஹரி கூட்டணி. கடைசியாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்த யானை திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் ஹரி அவர்களோடு ஆறு வேல் சிங்கம் 1,2,3 என ஐந்து படங்களில் கைகோர்த்த சூர்யா, தற்போது இயக்குனர் ஹரி மற்றும் அவரது மனைவி பிரீத்தா ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை திறந்து வைத்துள்ளார்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரும் இயக்குனர் ஹரியின் மாமனாருமான விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் மாண்புமிகு M.அப்பாவு அவர்களும், தமிழ்நாடு மீன்வள துறை அமைச்சர் மதிப்பிற்குரிய அனிதா .R. ராதாகிருஷ்ணன் அவர்களும் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய P.K. சேகர் பாபு அவர்களும் தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மதிப்பிற்குரிய T.மனோ தங்கராஜ் அவர்களும் இந்த துவக்க விழாவில் முன்னிலை வகித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த துவக்க விழாவின் வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த வீடியோக்கள் இதோ…
 

சினிமா

"வெற்றிமாறன் என்ற ஒரு பெயர்!"- விடுதலை படத்திற்காக பல படங்களை கைவிட்ட சூரியின் அசத்தலான பேட்டி இதோ!

சினிமா

"CARAVANக்கு உள்ளே போனதும் கண் கலங்கும்!"- காமெடியன்களின் போராட்டத்தை பகிர்ந்து கொண்ட சூரி... எமோஷனல் வீடியோ இதோ!

சினிமா

"வீடியோ கேமரா இருந்தா விமர்சனம் பண்ணலாம்னு நினைக்கிறாங்க"- விமர்சனங்களுக்கு எதிரான கோபம் குறித்து பதிலளித்த சூரி! வீடியோ இதோ