'பொன்னியின் செல்வன் மாதிரி 10 படங்கள் வந்தால் இந்த கேள்வி இருக்காது!'- நாவல் To சினிமா பற்றி ஜெயமோகனின் தரமான பதில்! வீடியோ உள்ளே

நாவல்கள் படமாக்கப்படுவது குறித்து ஜெயமோகன் பதில் அளித்துள்ளார்,writer jeyamohan opens about books to cinema | Galatta

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற திரை ஜாம்பவானாக திகழும் இயக்குனர் மணிரத்னம் தனது திரை பயணத்தில் மணிமகுடமாக இயக்கிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். நீண்ட காலமாக விடாமுயற்சியோடு போராடி அமரர் கல்கியின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட படைப்பை இயக்குனர் மணிரத்னம் உருவாக்கி இருக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.இதனை அடுத்து இரண்டாவது பாகம் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. 

பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். முன்னதாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நிமிடங்களில் பிரம்மிப்பின் உச்சமாய் தயாராகி இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.

இதனிடையே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரிடம், “பொன்னியின் செல்வன் நாவலில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பார்த்திருக்கிறோம் படித்திருக்கிறோம் ஆனால் படமாக பார்க்கும் போது நாவலில் இருந்தது போன்று இல்லையே என்ற இந்த ஒப்பீட்டை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்டபோது, “அதற்கு காரணம் அதிகமான நாவல்கள் இங்கு சினிமா ஆக்கப்படவில்லை... இன்னொன்று அப்படி சினிமா ஆக்கப்படும் போதும் கூட அதிகமாக மக்கள் படித்த ஒரு நாவல் சினிமாக்கப்படுவதில்லை. இந்த ஒரு காரணத்தினால் இரண்டு வெவ்வேறு கலை வடிவம் என்பது இங்குள்ள மக்களுக்கு சொல்லப்படவில்லை. அவர்களுக்கு தெரியாது. எனவே திரும்பத் திரும்ப சொல்லப்பட வேண்டும். பொன்னியின் செல்வன் மாதிரி பத்து திரைப்படங்கள் வந்திருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது. ஒரு வெள்ளைக்காரரிடம் இந்த கேள்வியை கேட்க மாட்டார்கள் இது வேறு ஒரு கலை வடிவம் என்று சொல்வார். பொன்னியின் செல்வன் நாடகமாக போட்டால் அது வேறு ஒரு கலை வடிவம். ஒரு நாடகத்தை சினிமாவாக மாற்றினால் அது வேறு ஒரு கலை வடிவம்” என எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…


 

“வெற்றிமாறன் எங்கிட்ட Discuss பண்ணல..” – எழுத்தாளர் ஜெயமோகன் விடுதலை படம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல் – அட்டகாசமான நேர்காணல் இதோ..
சினிமா

“வெற்றிமாறன் எங்கிட்ட Discuss பண்ணல..” – எழுத்தாளர் ஜெயமோகன் விடுதலை படம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல் – அட்டகாசமான நேர்காணல் இதோ..

“பொன்னியின் செல்வன் நாவல் போல் இல்லையே” என்ற விமர்சனத்திற்கு அட்டகாசமாக பதிலளித்த எழுத்தாளர் ஜெயமோகன் – முழு நேர்காணல் இதோ..
சினிமா

“பொன்னியின் செல்வன் நாவல் போல் இல்லையே” என்ற விமர்சனத்திற்கு அட்டகாசமாக பதிலளித்த எழுத்தாளர் ஜெயமோகன் – முழு நேர்காணல் இதோ..

சிலம்பரசன்TRன் பக்கா மாஸ் பத்து தல பட அடுத்த அதிரடி சர்ப்ரைஸ்... வெயிட்டாக வந்த ஒசரட்டும் பத்து தல பாடல் இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் பக்கா மாஸ் பத்து தல பட அடுத்த அதிரடி சர்ப்ரைஸ்... வெயிட்டாக வந்த ஒசரட்டும் பத்து தல பாடல் இதோ!