“விரைவில் சந்திப்போம்” சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட பிரபலம் - அட்டகாசமான அறிவிப்பு இதோ..

துருவ நட்சத்திரம் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு -  Harris Jayaraj about Dhruva Natchathiram | Galatta

தமிழ் சினிமாவில் படமாக்கப்பட்டு வெளிவராத படங்களின் பட்டியல் அதிகம். அதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர வைத்த மிக பெரிய நட்சத்திரங்களின் படங்களும் உண்டு. அதில் முக்கியமாக தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பில் நீண்ட நாட்களாக இருக்கும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’ சியான் விக்ரம் நடித்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இத்திரைப்படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது.

ஒன்றாக எண்டர்டெயின்மென்ட், கொண்டாடுவோம் எண்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்தில் சியான் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி (DD), விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணா, முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், மற்றும் அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 2016 ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி நீண்ட காலமாக ரிலீஸுக்கு காத்திருக்கும் இப்படத்தின் சில காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு  படக்குழு சார்பில் வெளியானது.அதன் படி நீண்ட காத்திருப்பிற்கு பின் துருவ நட்சத்திரம் வெளியாகவுள்ளது என ரசிகர்கள் உற்சாகத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துருவ நட்சத்திரம் படம் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “கௌதம் மேனன் படமான துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசை Dolby 9.1.4 வடிவில் உருவாக்கப்பட்டு வருகிறது..விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவரது பதிவு ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Started the Background score for @menongautham ‘s film #Dhruvanatchathiram. in Dolby 9.1.4 See you soon in theatres.

— Harris Jayaraj (@Jharrisjayaraj) February 25, 2023

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தின் டீசர் மற்றும் முன்னோட்டத்திற்கு கொடுத்துள்ள பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்து அப்போது மிகப்பெரிய அளவு டிரெண்ட் ஆனது. மேலும் படத்திற்காக இவரது இசையில் ‘ஒரு மனம்’ என்ற பாடல் கடந்த 2020 ல் வெளியானது. பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. கௌதம் வாசுதேவ் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி இதுவரை தோல்வியை சந்திதிடாத கூட்டணி என்ற பெயர் தமிழ் சினிமாவில் திரை ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த வெற்றி தொடர் இந்த படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் -  யார் இந்த பிரபலம்.. விவரம் உள்ளே..
சினிமா

பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் - யார் இந்த பிரபலம்.. விவரம் உள்ளே..

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அட்டகாசமான புதிய படம்... கலக்கலான முதல் பாடலின் லிரிக் வீடியோ இதோ!
சினிமா

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அட்டகாசமான புதிய படம்... கலக்கலான முதல் பாடலின் லிரிக் வீடியோ இதோ!

பிக்பாஸ், குக் வித் கோமாளி தொடர்ந்து பாபா பாஸ்கர் மாஸ்டரின் புது அவதாரம்..  - ரசிகர்களால் வைரலாகி வரும் வீடியோ இதோ..
சினிமா

பிக்பாஸ், குக் வித் கோமாளி தொடர்ந்து பாபா பாஸ்கர் மாஸ்டரின் புது அவதாரம்.. - ரசிகர்களால் வைரலாகி வரும் வீடியோ இதோ..