“எல்லோரும் நல்லாருக்கனும் னு நினைப்பாரு..” மயில்சாமி மகனின் உருக்கமான நேர்காணல் - முழு வீடியோ இதோ..

மயில்சாமி  மகன் அன்பு மயில்சாமியின் உருக்கமான நேர்காணல் - Mayilsamy son emotional interview | Galatta

பிரபல நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான மயில் சாமியின் மறைவை தமிழ் சினிமா ஈடு செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் மயில்சாமி குறித்து பலருக்கும் தெரியாத பல தகவல்களை அவரது மகன் அன்பு மயில்சாமி நமது கலாட்டா மீடியாவிற்கு பகிர்ந்த  வீடியோ இதோ..

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பிலும் வித்யாசமான குரல் வடிவமைப்பையும் வைத்து பல தசாப்தங்களாக மக்களை உற்சாகப் படுத்திய பிரபல காமெடி நடிகர் கடந்த பிப்ரவரி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல் ததிரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது இறப்பையடுத்து திரையுலகமே கண்ணீரில் மூழ்கியது. திரய்துரையில் மட்டுமல்ல சமூக நலப்பநியிலும் இவரது பங்கு அளப்பரியது. ஈடு செய்ய முடியாத இவரது இழப்பு இன்றும் மக்கள் வருத்ததுடன் பேசி வருகின்றனர். இந்நிலையில் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமியின் இறுதி நிமிடம் மற்றும் ஆன்மீக பயணம் போன்ற  பல தகவல்களை நமது கலாட்டா தமிழ் மீடியாவில் பகிர்ந்து கொண்டார்.

அதில்  மயில் சாமி ஆன்மீக அக்கறை குறித்து பேசிய அன்பு மயில்சாமி,

"அன்னிக்கு சிவராத்திரியின் போது அந்த கோவில் சிறப்பம்சம் குறித்து என்னிடம் பேசினார். மேலும் அந்த கோவில் ரஜினி சார் க்கு கண்டிப்பா பிடிக்கும் என்றார்.‌ அப்போதே அவரை தொடர்பு கொள்ள தொலைபேசியில் அவர் நம்பரை எடுத்து அழைக்க பார்த்தார். பின் அங்கு சத்தம் அதிகமாக இருந்ததால் நான் பிறகு பேசுகிறேன் என்று சொல்லி அவரை அழைக்காமல் விட்டார்"  மேலும் தொடர்ந்து "அவர் நிறைய சாமி கும்பிடுவாரு.. பழைய கோவிலுக்கு லாம் போவாரு.. அந்த கோவில் பராமரிக்காமல் இருந்தால் மனம் வருத்தமடைவார். அவர் ரொம்பவே இளகுன மனசு‌. 10 நாள் முன்னாடி கூட ஒரு கோவிலுக்கு போய் பெயிண்ட் பண்ணி தரனு சொல்லிட்டு ஒரு தொகை கொடுத்துட்டு வந்துருக்காரு..” மேலும் மயில்சாமியின் உதவும் மனப்பாங்கு சேவையை தொடர்ந்து செய்ய உங்களுக்கு திட்டம் இருக்கா? என்ற கேள்விக்கு உடனே

அவர்  “அவர் பாக்குறவங்க எல்லோரும் நல்லாருக்கனும் னு நினைப்பாரு..நம்ம கிட்ட உதவி னு வந்தா செஞ்சி கொடுக்கனும் அவங்க என்ன கேட்டாலும் செஞ்சி கொடுக்கனும் அதான் அவர் சொல்லுவாரு.. அதனால்  கண்டிப்பா அதை பின் தொடர்வேன்.. அதுதான் அப்பா சொல்லி கொடுத்திருக்கிறார். உதவி செய்யுங்க.. யாரையும் காத்திருக்க வைக்காதீங்க.. முடியவில்லை என்றால் வேறு ஒருவரை கைகாட்டியாவது விடு..‌என்று சொல்வார். மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.. சந்தோஷமா இருங்க.. முடிச்சா எல்லோரையும் சிரிக்க வையுங்கள்.. எல்லோரையும் பார்த்துக்கோங்க.. என்று நிறைய எங்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்.” என்றார்.

மேலும் மறைந்த மயில்சாமி குறித்த பல தகவல்களை அவரது மகன் அன்பு மயில்சாமி நமது கலாட்டா பேட்டியில் பகிர்ந்த முழு வீடியோ..

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து தமன்னா.. - வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து தமன்னா.. - வைரலாகும் Glimpse இதோ..

சினிமா

"எனக்கும் ஜெயலலிதாவிற்கும் மனஸ்தாபம் இருந்தது".. மனம் திறந்த ரஜினிகாந்த் - ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகும் வீடியோ.. விவரம் இதோ..

“எனக்கு Inspiration ராஜமௌலி தான்..” மணிரத்தினம் அளித்த அட்டகாசமான பதில் - ஆச்சரியத்தில் உறைந்த ராஜமௌலி.. விவரம் இதோ..
சினிமா

“எனக்கு Inspiration ராஜமௌலி தான்..” மணிரத்தினம் அளித்த அட்டகாசமான பதில் - ஆச்சரியத்தில் உறைந்த ராஜமௌலி.. விவரம் இதோ..