அடுத்தடுத்து விருதுகளை குவிக்கும் ராஜமௌலியின் RRR.. 4 விருதுகளுடன் மேடையில் மாஸ் காட்டிய படக்குழு - உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..

ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்திற்கு மேலும் நான்கு உயரிய விருதுகள் - SS Rajamouli RRR movie won 4 award at HCA | Galatta

கடந்த 2022 ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. பாகுபலியின் உலகளாவிய வெற்றிக்கு பின்பு இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்டமான படைப்பு. ஆர் ஆர் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய்தேவ் கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் உணர்வு பூர்வமான கதைகளத்தை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சார்ந்து திரைக்கதை அமைத்திருக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. வசூல் ரீதியாக உலகளவில் இன்னும் கோடிகளை குவித்து வருகிறது. மேலும் இன்னும் உலக நாடுகளில் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. வசூல் மற்றும் விமர்சனம் மட்டுமல்லாமல் உலக மேடைகளில் விருதுகளை குவித்து இந்திய திரையுலகதிருக்கு மிகபெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்.  இதில் குறிப்பாக உலகின் உயரிய திரைத்துறை விருதான ஆஸ்கர் விருதில் சிறந்த பாடலுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நிச்சயம் 2023 ஆஸ்கர் போட்டியில் RRR படத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதினையும் சிறந்த படத்திற்காகவும் சிறந்த பாடலுக்காகவும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உயரிய விருதான ஹாலிவுட் கிரிடிக் அசோசியசன்  (Hollywood Critics Association)  6 வது ஆண்டு விழா சார்பில் நடத்தப்படும் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் பல பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் ஆர் ஆர் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த பாடல், சிறந்த சண்டை வடிவமைப்பு, சிறந்த ஆக்ஷன் திரைப்படம் ஆகிய பட்டியலில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த பாடலுக்கான விருதினை படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி பெற்றுகொண்டார். மேடையில் பேசிய அவர், “இந்த விருதினை பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார் மேலும் தனது நன்றியினை ராஜமௌலிக்கு இசையின் மூலம் தெரிவித்தார்.

And the HCA Award Acceptance …

RRR#RRR #RRRMovie #RamCharan #SSRajamouli #NTRamaRaoJr #HCAFilmAwards #BestOriginalSong pic.twitter.com/rVuTJQzbBs

— Hollywood Critics Association (@HCAcritics) February 25, 2023

மேலும் சிறந்த ஆக்ஷன் படத்திற்கான விருதினையும் சிறந்த சண்டை வடிவமைப்பிற்கான விருதினையும்  இயக்குனர் ராஜமௌலி பெற்றுக் கொண்டார். விருதினை பெற்ற ராஜமௌலி, “இந்த விருதினை பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதனை நான் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.” என்றார் மேலும் “நான் விருது வழங்கும் அமைப்புகளுக்கு ஒரு கோரிக்கையை வைக்கின்றேன். நீங்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் ஸ்டண்ட் என்ற பிரிவினை வையுங்கள்.. அவர்களுக்கு நிச்சயம் அது தேவைபடுகிறது. இந்த விருதினை அனைத்து சண்டை வடிவமைப்பாளருக்கு சமர்பிக்கிறேன்” என்றார்.

And the HCA Award Acceptance for Best Action Film …

RRR#RRR #RRRMovie #RamCharan #SSRajamouli #NTRamaRaoJr #HCAFilmAwards #BestActionFilm pic.twitter.com/9BfCHf4Swj

— Hollywood Critics Association (@HCAcritics) February 25, 2023

அடுத்தாண்டு ஆஸ்கர் விருது விழா நடைபெறவுள்ள நிலையில் தற்போது ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு கிடைத்த இந்த விருதுகளை படக்குழுவினருடன் இணைந்து ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த விருது விழா அறிவிப்பு இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

.@ssrajamouli & @AlwaysRamCharan’s acceptance speech for the Best International Film Award at @HCAcritics !! #HCAAwards #RRRMovie pic.twitter.com/QEK3QxR4cQ

— RRR Movie (@RRRMovie) February 25, 2023

 “அப்பா இறந்ததை நான் அம்மாவிடம் சொல்லவில்லை” மறைந்த மயில்சாமியின் மகன் பகிர்ந்த தகவல் - உருக்கமான வீடியோ இதோ..
சினிமா

“அப்பா இறந்ததை நான் அம்மாவிடம் சொல்லவில்லை” மறைந்த மயில்சாமியின் மகன் பகிர்ந்த தகவல் - உருக்கமான வீடியோ இதோ..

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து தமன்னா.. - வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து தமன்னா.. - வைரலாகும் Glimpse இதோ..

சினிமா

"எனக்கும் ஜெயலலிதாவிற்கும் மனஸ்தாபம் இருந்தது".. மனம் திறந்த ரஜினிகாந்த் - ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகும் வீடியோ.. விவரம் இதோ..