கெளதம் மேனன் பிறந்தநாளை முன்னிட்டு சிம்புவின் ‘பத்து தல’ படக்குழுவினர் வெளியிட்ட சிறப்பு போஸ்டர்.. – வைரலாகும் Mass Look இதோ..

பத்து தல படத்தில் கௌதம் மேனன் போஸ்டர் வெளியானது - Pathu thala team unveiled Goutham menon Look on his birthday | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழில் 2001 'மின்னலே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கௌதம் மேனன். முதல் படத்திலே பார்வையாளர்களை அதிகம் கவர்ந்த கௌதம் மேனன் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார் தமிழில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கி பிரபலமானார். அவரது படங்கள் போலவே அவரும் கிளாஸ் லுக்கில் இருப்பதால் இவருக்கும் இவரது படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.  அஜித், சிலம்பரசன், சூர்யா, தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி பல பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்தவர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுடன் படங்களை இயக்கி வரும் கெளதம் மேனன் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் சில படங்களில் சிறு சிறு காட்சிகளில் தலையை காட்டுவது வழக்கம். 2020 ல் தேசிங் பெரியசாமி இயக்கத்தில்  வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதே ஆண்டில் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான ‘டிரான்ஸ்’ படத்திலும் நடித்தார். பின் தொடர்ந்து நடிகராகவும் கௌதம் வாசுதேவ் மேனன் கவனம் பெற்றார். அதன் படி தற்போது பல  முக்கிய படங்களில்  நடித்து வருகிறார். குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘லியோ’ படத்திலும் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘விடுதலை’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் கௌதம் மேனன் நடித்து வரும் முக்கிய திரைப்படம் ‘பத்து தல’. கன்னடத்தில் மெகா ஹிட் கொடுத்த ‘மப்டி’ படத்தின் ரீமேக்கை நெடுஞ்சாலை படத்தின் இயக்குனர் ஒபெலி கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக சிலம்பரசன் TR நடித்து வருகிறார். மேலும் படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், டிஜே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் முன்னதாக வெளியானது. அதன்படி இன்று கௌதம் வாசுதேவ் மேனன் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல படக்குழுவினர் பத்து பல படத்தில்  கௌதம் மேனன் நடிக்கும் கதாபாத்திரத்தின் தோற்றத்தை அறிமுகம் செய்யும்படியில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அசத்தலாக கௌதம் மேனன் வெள்ளை சட்டையுடன் இருக்கும் போஸ்டர் தற்போது ரசிகர்களின் வாழ்த்துகளுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Wishing Our Beloved Filmmaker & Actor Gautham Vasudev Menon sir, a Very Happy Birthday 🥳✨ From Entire team of #PathuThala

Can't wait to see you in #AGR's world 🔥@menongautham #HappyBirthdayGauthamVasudevMenon #HBDGVM #HappyBirthdayGVM#Atman #SilambarasanTR pic.twitter.com/np4P6nknZF

— Studio Green (@StudioGreen2) February 24, 2023

பத்து தல திரைப்படத்தின் முதல் பாடல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அப்படத்தின் இரண்டாவது பாடலை சிறப்பு காட்சிகளுடன் படமாக்கப்பட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த பாடலில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.  

“எல்லோரும் நல்லாருக்கனும் னு நினைப்பாரு..” மயில்சாமி மகனின் உருக்கமான நேர்காணல் -  முழு வீடியோ இதோ..
சினிமா

“எல்லோரும் நல்லாருக்கனும் னு நினைப்பாரு..” மயில்சாமி மகனின் உருக்கமான நேர்காணல் - முழு வீடியோ இதோ..

அமெரிக்காவில் வெற்றிமாறன் படத்தை பரிந்துரைத்த ராஜமௌலி -  5 திரைப்படங்கள் கொண்ட பட்டியலில் இடம் பெற்ற அட்டகாசமான தமிழ் படம்.. விவரம் இதோ..
சினிமா

அமெரிக்காவில் வெற்றிமாறன் படத்தை பரிந்துரைத்த ராஜமௌலி - 5 திரைப்படங்கள் கொண்ட பட்டியலில் இடம் பெற்ற அட்டகாசமான தமிழ் படம்.. விவரம் இதோ..

 “அப்பா இறந்ததை நான் அம்மாவிடம் சொல்லவில்லை” மறைந்த மயில்சாமியின் மகன் பகிர்ந்த தகவல் - உருக்கமான வீடியோ இதோ..
சினிமா

“அப்பா இறந்ததை நான் அம்மாவிடம் சொல்லவில்லை” மறைந்த மயில்சாமியின் மகன் பகிர்ந்த தகவல் - உருக்கமான வீடியோ இதோ..