தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக தனது மிடுக்கான உடல் மொழியாலும் மிரட்டலான குரலாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் அர்ஜுன். முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி திரைப்படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அர்ஜுன் தாஸ்.

இதனையடுத்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிளாக் பஸ்டர் திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தில் தாஸ் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், தொடர்ந்து இயக்குனர் அட்லி தயாரிப்பில் வெளிவந்த அந்தகாரம் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

அடுத்ததாக தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள அநீதி படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் அநீதி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேடி என்கிற கருப்புதுரை படத்தின் இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அங்கமாலி டைரிஸ் படத்தை தழுவி உருவாகும் புதிய பாலிவுட் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தை தயாரிக்கும் ABUNDANTIA ENTERTAINMENT நிறுவனம் இந்தத் திரைப்படத்தையும் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

.@iam_arjundas to make his Hindi debut as the lead in #AngamalyDiaries adaptation directed by @memadhumita Produced by @Abundantia_Ent the producers of the Hindi version of #SooraraiPottru starring @akshaykumar pic.twitter.com/NMyUgtujuE

— Yuvraaj (@proyuvraaj) June 28, 2022