குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான நடிகை ஹன்சிகா மோத்வானி தொடர்ந்து கதாநாயகியாகவும் களமிறங்கி கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய திரை உலகில் பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். இந்த 2022ஆம் ஆண்டு ஹன்சிகா மோத்வானி நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக விரைவில் ரிலீசாக இருக்கிறது மஹா திரைப்படம். இயக்குனர் U.R.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்திருக்கும் மஹா திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ் படத்திலும் ஹன்சிகா நடித்துள்ளார்.

மேலும் நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்திருக்கும் பார்ட்னர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஹன்சிகா.மஹா,105 மினிட்ஸ் & பார்ட்னர் இம்மூன்று படங்களும் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளன. அடுத்ததாக இயக்குனர் J.M.ராஜ சரவணன் இயக்கத்தில் உருவாகும் ரவுடிபேபி படத்தில் நடித்து வரும் ஹன்சிகா மோட்வானி நடிப்பில் அடுத்த படமாக தயாராகியுள்ளது மை நேம் இஸ் ஸ்ருதி.

வைஷ்ணவி ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் புருகு ரம்யா பிரபாகர் தயாரிப்பில் தெலுங்கில் தயாராகியுள்ள மை நேம் இஸ் ஸ்ருதி படத்தை இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஓம்கர் இயக்கியுள்ளார். கதாபாத்திரத்தின் ஹன்சிகா நடிக்க அவருடன் இணைந்து பிரேமா, முரளி சர்மா, ஆடுகளம் நரேன், பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரா, பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கிஷோர் போயிடப்பு ஒளிப்பதிவில் மை நேம் இஸ் ஸ்ருதி படத்திற்கு மார்க்.கே.ராபின் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஹன்சிகாவின் மை நேம் இஸ் ஸ்ருதி படத்தின் விறுவிறுப்பான டீசர் தற்போது வெளியானது. சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் மை நேம் இஸ் ஸ்ருதி படத்தின் டீசரை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.