தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக பல மாநிலங்களை கலக்கி வருகிறார்.தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோயினாக அறிமுகமானார் ஹன்சிகா.

தொடர்ந்து தமிழ்,தெலுங்கு என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.இவர் நடித்த படங்களும் ரசிகர்கள் மத்தியல் ஹிட் அடிக்க இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து அசத்தினார் ஹன்சிகா.

அடுத்ததாக சில கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஹன்சிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்

தற்போது தனது வருங்கால வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஹன்சிகா.தனது நீண்ட நாள் நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கதுரியாவை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ஈபிள் டவர் முன்பு ஒரு அசத்தலான ரொமான்டிக் போட்டோஷூட்டுடன் அறிவித்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறும் என தெரிகிறது.