இசையமைப்பாளர் & நடிகர் என தமிழ் திரையுலக ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் அடுத்ததாக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ரெபல் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து 13, இடிமுழக்கம் ஆகிய திரைப்படங்களும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகி வருகின்றன. சமீபத்தில் சூரரைப்போற்று படத்திற்காக ஜீவி பிரகாஷ் குமார் தனது முதல் தேசிய விருதை கைப்பற்றினார்

இசையமைப்பாளராக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடிக்கும் வாத்தி, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களுக்கு இசையமைக்கும் ஜீவி பிரகாஷ் குமார் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கும் இசையமைக்கிறார்.

மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம், கார்த்தியின் சர்தார், ராகவா லாரன்ஸின் ருத்ரன், விஷாலின் மார்க் ஆண்டனி உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். முன்னதாக இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த சர்வம் தாள மயம் திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. 

சர்வம் தாள மயம் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்வம் தாளமயம் திரைப்படம் தற்போது ஜப்பானில் ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by ARR (@arrahman)