தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வலம் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல், இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் மற்றும் தெலுங்கு & தமிழ் என இரு மொழிகளில் தனுஷ் நடிக்கும் வாத்தி உள்ளிட்ட படங்களுக்கு இசைமைத்து வருகிறார். 

மேலும் பிரகாஷ் இசையில் கார்த்தியின் சர்தார், அருண்விஜயின் யானை, விஷாலின் மார்க் அண்டனி மற்றும் லாரன்ஸின் ருத்ரன் ஆகிய திரைப்படங்களும் தயாராகின்றன. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கிவரும் ஜீவி பிரகாஷ் குமார், முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த இடிமுழக்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

அடுத்ததாக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகும் ரெபல் படத்தில் நடித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐயங்கரன் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கிறது .ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் பெறடி, அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . 

ஐங்கரன் படத்தை காமன் மேன் நிறுவனம் சார்பில் B.கணேஷ் தயாரிக்க, சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சம்மர் வெளியீடாக G.V.பிரகாஷின் ஐங்கரன் திரைப்படம் வருகிற மே 5-ஆம் தேதி ரிலீசாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது