தமிழ் திரை உலகின் சிறந்த இசையமைப்பாளராக தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் பாடல்களை கொடுத்து வரும் இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இசையில் அடுத்தடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல், இயக்குனர் பாலா-சூர்யாவின் புதிய படம், தெலுங்கு & தமிழ் என இரு மொழிகளில் தனுஷின் வாத்தி, கார்த்தியின் சர்தார், அருண் விஜயின் யானை, விஷாலின் மார்க் ஆண்டனி மற்றும் லாரன்ஸின் ருத்ரன் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரு ஜீவி பிரகாஷ் குமார் தற்போது அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகும் ரெபல் படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி நடித்த இடிமுழக்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இந்த வரிசையில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்து நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கும் ஐங்கரன் திரைப்படம் ( மே 12ஆம் தேதி) நாளை உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகிறது. ஈட்டி படத்தின் இயக்குனர் இயக்குனர் ரவியரசு இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் பெறடி, அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

காமன் மேன் நிறுவனம் சார்பில் B.கணேஷ் தயாரித்துள்ள ஐங்கரன் படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் ஐங்கரன் திரைப்படத்திலிருந்து புதிய Sneak Peek வீடியோ தற்போது வெளியானது.  விறுவிறுப்பான அந்த புதிய Sneak Peek வீடியோ இதோ…