தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இசை அமைப்பாளர் GV பிரகாஷ் குமார் சமீபத்தில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக தனது முதல் தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிக்க ரீமேக் ஆகும் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படத்திற்கும் GV பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கார்த்தி நடிப்பில் தீபாவளி வெளியீடாக ரிலீசாகவிருக்கும் சர்தார் படத்திற்கு இசையமைத்துள்ள GV பிரகாஷ் குமார் தனுஷின் வாத்தி & கேப்டன் மில்லர், சூர்யாவின் வணங்கான், விஷாலின் மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களுக்கும் இசை அமைக்கிறார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கவனம் ஈர்க்கும் GV, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள இடிமுழக்கம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

முன்னதாக GV பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் இணைந்து நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த செல்ஃபி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 13. இயக்குனர் K.விவேக் எழுதி இயக்கியுள்ள 13 திரைப்படத்தை மெட்ராஸ் ஸ்டுடியோஸ் & அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.

CM.மூவேந்தர் ஒளிப்பதிவில், JF கேஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்துள்ள 13 திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் 13 திரைப்படத்தின் டீசர் சற்று முன்பு வெளியானது. GV - GVMன் கூட்டணியில் விறுவிறுப்பான த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் திரைப்படத்தின் டீசர் இதோ…