தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இசையமைப்பாளராக பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அடுத்ததாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

அக்னிச்சிறகுகள், காக்கி, தமிழரசன் என அடுத்தடுத்து திரைப்படங்கள் வரிசையாக விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில், ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் தமிழ் படம் பட இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் ரத்தம் ஆகிய படங்களும் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரவுள்ளன.

இதனிடையே இயக்குனர் பாலாஜி.K.குமார் இயக்கத்தில் க்ரைம்-சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ள கொலை படத்தில் ராதிகா சரத்குமார், மீனாக்ஷி சௌத்ரி, முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள கொலை படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கொலை திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள கொலை படத்தின் ட்ரைலர் இதோ...