தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். கேஜிஎஃப்-ஐ மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வித்தியாசமான காதல் திரைப்படமாக தயாராகி இருக்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனிடையே தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் தனது நிலம் புரோடக்சன்ஸ் சார்பில் புதிய ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனரான ஜெயக்குமார் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த திரைப்படத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்கியராஜ், பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நீலம் ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து லெமன் லைஃப் க்ரியேஷன்ஸ் இப்படத்தை இணைந்து வழங்குகிறது.

தமிழ் பிரபா மற்றும் இயக்குனர் ஜெயக்குமார் இணைந்து திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு தமிழ்.A.அழகன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆகஸ்ட் 15-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

To new beginnings 😍🙏🏻
My next with @officialneelam productions @beemji directed by @chejai007 along with my buddies @AshokSelvan @iKeerthiPandian @prithviactor 💛@Lovekeegam @that_Cameraman #GovindVasantha @lemonleafcreat1
எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🏻 pic.twitter.com/5StDdqP9s9

— ஷாந்தனு (@imKBRshanthnu) August 15, 2022