இந்திய திரையுலகின் பெருமை உலக நாயகன் கமல் ஹாசனின் 64 வருட பயணம்.. - கொண்டாடும் திரை பிரபலங்கள்.. விவரம் உள்ளே..

திரையுலகமே கொண்டாடும் கமல் ஹாசனின் 64 வருட பயணம் விவரம் உள்ளே - Film industry celebrating 64 years of Kamal haasan Journey | Galatta

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக 4 வயதில் அறிமுகமானவர் உலகநாயகன் கமல் ஹாசன். முதல் படமான களத்தூர் கண்ணம்மாவில் சிறப்பாக நடித்து குடியரசு தலைவர் விருதை பெற்றதும் குறிப்பிடதக்கது. களத்தூர் கண்ணம்மா வெளியாகி இன்றுடன் 64 வருடம் தொடங்குகிறது. இதனை ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் 64 Years of Kamal haasan என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். உலகநாயகன் கமல் ஹாசன்  முதல் படம் தொடங்கி பின் எம் ஜி ஆர் போன்ற பெரும் நட்சத்திரங்களுடன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். குழந்தை நட்சத்திரமாக தொடங்கி அதன்பின் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்தார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளிலும் கமல் ஹாசன் பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவரானார்.

எந்தளவு வசூலை ரசிகர்களின் ஆரவாரத்துடன் குவித்தாரோ அதே நிலையில் தன் அசாதர நடிப்பினால் பத்ம பூஷன், 4 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்று திரையுலகின் சிறந்த திரை கலைஞராகவும் உயர்ந்து நின்றார். மேலும் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும், பின்னணி பாடகராகவும் என்று தன் பன்முக திறனை நேர்த்தியாக கொடுத்து ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வருகிறார்.

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் மூத்த நடிகராக வலம் வரும் கமல் ஹாசன் இந்திய ரசிகர்களால் உலகநாயகன் என்று கொண்டாடப் பட்டு வருகிறார். தன் முதிர்ந்த வயதிலும் ரசிகர்களுக்காக சரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்து இன்றும் முதன்மை நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அதன்படி கடந்த ஆண்டு இவரது நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ இமாலய வெற்றி பெற்று இந்திய திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த மாபெரும் வெற்றியயை தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்  2’ படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் தெலுங்கு. இந்தி என இரு மொழிகளில் பிரம்மாண்டமாக் உருவாகும் ‘கல்கி 2898 ஏடி’ என்ற படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படங்களையடுத்து கமல் ஹாசன் தனது 233 வது படமான ‘KH233’ என்ற படத்தை எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதையடுத்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ‘KH 234’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்திய திரையுலகில் அசாதர உழைப்பை கொடுத்து வரும் உலகநாயகன் கமல் ஹாசனின் 64 ஆண்டு கால பயணத்தை ரசிகர்களுடன் இணைந்து திரை பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி திரைபிரபலங்களின் வாழ்த்துகள் குறித்த தொகுப்பு பின் வருமாறு..

6 Decades of KalaiyUlagaNayagan 💥🔥❤️.#64YearsOfKamalism#KamalHaasan
Designed by - @Clinton22Roach
Organised by - @SouthMixMedia pic.twitter.com/wRCZ2ZSQ1H

— Rathna kumar (@MrRathna) August 12, 2023

Celebrating 64 Years of #Ulaganayagan @ikamalhaasan ’s cult. Here's to forever being a fan of your work sir!#64YearsofKamalism @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/TU9ZsbjEpj

— Silambarasan TR (@SilambarasanTR_) August 12, 2023

64 years of Pure Passion & Inspiration @ikamalhaasan sir 🙏🏼🙏🏼🙏🏼#64YearsOfKamalism https://t.co/KkEokZe8JV

— karthik subbaraj (@karthiksubbaraj) August 12, 2023

Celebrating 64 Years of @ikamalhaasan sir ☺️

#64YearsofKamalism@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/noLL0NOJDG

— VijaySethupathi (@VijaySethuOffl) August 12, 2023

G.O.A.T #GreatestofAllTime

Celebrating 64 Years of #Ulaganayagan @ikamalhaasan sir's Legacy.#64YearsofKamalism @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/DUguUbK20K

— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) August 12, 2023

Ups & Downs, Laurels & Challenges. He's seen it all. But nothing can come between Ulaga Nayagan and his untiring effort to uplift the Industry. The Unparalleled Emperor for 6 decades is stepping into his 64th year in Cinema.#64YearsOfKamalism#KamalHaasan
Designed by -… pic.twitter.com/T1EGDPzLSW

— shruti haasan (@shrutihaasan) August 12, 2023
 

Sirrrrrrrr what a greatest, inspiring journey which started at the age of 6 and crossing 64 & lot more is planned 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐 https://t.co/YAbfBixEN0

— S J Suryah (@iam_SJSuryah) August 12, 2023