“தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘லியோ 2’ உருவாகுமா..?” தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல்..- Exclusive Interview உள்ளே..

லியோ 2 படம் உருவாகுமா என்பது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல் -  Producer Dhananjayan about Thalapathy Vijay leo sequel plan | Galatta

தமிழ் திரையுலகில் எதிர்ப்பார்ப்புகள் மத்தியில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘லியோ’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் மற்றும் பிரியா ஆனந்த், மாத்திவ் தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். முன்னதாக இவர் இசையில் வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று டிரெண்ட்டிங் கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் லியோ திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகவிருக்கும் லியோ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்ற கேள்வி குறித்து அவர் பேசுகையில்,  

"இல்ல.. இப்போ லியோ வருது.. அதை தவிர லியோ பாகம் இரண்டு வரல.. அதுக்கான லீட் இருக்கு.. பாகம் இரண்டிற்கான தொடர்ச்சி இதில் இருக்கும் என்று நான் கேள்வி பட்டேன்.

விக்ரம் படத்துல Open End கொடுத்தாங்கல..  அதுபோல லியோ படத்துல இருக்கும்.. ஜெயிலர் படத்தை பாதியில நிறுத்துனா நல்லாருக்காது ல அது போல தான் லியோ படம் முழுசா முடிஞ்சு.. " என்றார். மேலும் தொடர்ந்து  "லியோ நாளைக்கு பெரிய வெற்றியடையும் போது லியோ 2 வை பெரிய தொகையில் விற்பது தயாரிப்பாளருக்கு எளிமையான விஷயம்.  எப்படி பாகுபலி, கேஜிஎஃப், பொன்னியின் செல்வன் போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே மாதிரி லியோ 2 வந்தா அதற்கும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனா லியோ 2 என்பது கதையிலே அப்படியே அமையனுமே தவிர அதை வற்புறுத்தி சேர்க்க முடியாது.. அதனால் இப்போதைக்கு லியோ 2 இல்ல.. மீண்டும் இதே கூட்டணி அமைந்தால் அது லியோ 2 வா அமைய வாய்ப்புள்ளது." என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

மேலும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் அடங்கிய வீடியோ இதோ..