சில மாத காலமாக பிஸியான அரசியல்வாதியாக வலம் வந்த நடிகர் கமல், தற்போது மீண்டும் தான் நடிக்க உள்ள படங்களில் கவனம் செலுத்த உள்ளார். அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் திரைப்படத்தை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளராம் உலக நாயகன் கமல். ஆனால் அதற்குள் விக்ரம் திரைப்படத்தில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நட்சத்திர இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தை முடித்த கையுடன் மாஸ்டர் திரைப்படத்தில் கமிட் ஆனரோ, அதேபோல் விக்ரம் திரைப்படத்திலும் கமிட் ஆனார். ஆனால் கமல் சட்டமன்ற தேர்தல் வேளைகளில் பிசியாக இருந்ததால், தேர்தல் முடிந்த பின்னரே படத்தை துவங்கும் நிலை உருவானது.

இந்நிலையில் சமீபத்தில் கொரோனோவால் பாதிக்கப்படிருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நேற்று தன்னுடைய ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தியுள்ளார். கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டது குறித்து பதிவுவும் செய்திருந்தார் லோகேஷ். 

முன்பு விக்ரம் திரைப்படத்தில் கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக பேச்சு கிளம்பியது. ஆனால் இதுகுறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை. 

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடிக்க உள்ளார் என்கிற பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க உள்ளேன் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் ஆன்லைன் பேட்டி ஒன்றில் நடிகர் பகத் ஃபாசில் உறுதி செய்துள்ளார்.