நிறைவுக்கு வந்த சூப்பர்ஹிட் சீரியல் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | March 28, 2022 17:26 PM IST
தமிழின் முன்னணி சேனல்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது கலர்ஸ் தமிழ்.இவர்களது நிகழ்ச்சிகளும்,சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் விரைவில் கவனம் ஈர்த்து தனி ரசிகர் பட்டாளத்தை பெற்று வருகிறது.இவர்கள் தொலைக்காட்சியில் பணியாற்றும் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக மாறி வருகின்றனர்.
ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களையும் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பி வருகின்றனர்.கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடர் எங்க வீட்டு மீனாட்சி.லொள்ளு சபா தொடரின் மூலம் புகழ்பெற்ற ஜீவா இந்த தொடரின் ஹீரோவாக நடித்துள்ளார்.பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பல சினிமா நடிகைகளும் சீரியல்களில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகின்றனர்.அந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளவர் Shritha shivadas.இவர் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு 2 படத்தின் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தார்.இவருக்கு இந்த தொடர் மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடர் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.செம விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் 125 எபிசோடுகளுடன் நிறைவுக்கு வந்தது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.