மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். முன்னதாக தமிழில் இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான் காஜல்அகர்வால் அதிதி ராவ் ஹைதாரி இணைந்து நடித்த ஹே சினாமிகா திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்ததாக பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாக்கியுள்ள சுப்-ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட் எனும் த்ரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள துல்கர் சல்மான், தெலுங்கில் இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் யுத்தம் ராசினா ப்ரேம கதா திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மலையாளத்தில் காவல் துறை அதிகாரியாக துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் சல்யூட். இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சல்யூட் திரைப்படத்தை தனது வேஃபெரர் பிலிம்ஸ் சார்பில் துல்கர் சல்மான் தயாரிக்க, அஸ்ஸலாம் கே புறையில் ஒளிப்பதிவில். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

க்ரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் சல்யூட் படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து டயானா பெண்டி, மனோஜ்.கே.ஜெயன், லக்ஷ்மி கோபாலசுவாமி, சாய்குமார், விஜயகுமார், பினு பப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட சல்யூட் திரைப்படம் விரைவில் SonyLIV OTT தளத்தில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.