பல ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராக திகழும் நடிகர் துல்கர் சல்மான் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து அனைத்து மொழிகளிலும் நட்சத்திர நடிகராக வலம் வருபவர். முன்னதாக இந்த ஆண்டு தமிழில் ஹே சினாமிகா மற்றும் மலையாளத்தில் சல்யூட் ஆகிய திரைப்படங்கள் துல்கர் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக முன்னணி பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் CHUP-REVENGE OF THE ARTIST  திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் துல்கர் சல்மான் தொடர்ந்து இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் சீதா ராமம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் முதல்முறையாக வெப் சீரிஸில் காலடி எடுத்து வைக்கும் துல்கர் சல்மான் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் அவருடன் இணைந்து பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் வாழ் பட நடிகை TJ பானு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் விரைவில் ரிலீசாக உள்ள கன்ஸ் அண்ட் குலாப்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் 99 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது முற்றிலும் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj & DK (@rajanddk)