தமிழ் திரையுலகின் சிறந்த இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் இன்று (டிசம்பர் 3-ம் தேதி) திரையரங்குகளில் வெளியான பேச்சுலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனையடுத்து ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி திரைப்படம் அடுத்து தயாராகி வருகிறது.

கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் , இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான, இயக்குனர் மதி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படத்தின் அதிரடியான ட்ரைலர் நேற்று (டிசம்பர் 2) வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்துள்ள இடிமுழக்கம் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்த ஜெயில் திரைப்படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜெயில் படத்தில் அபர்ணிதி, ராதிகா சரத்குமார், பிரபாகர், யோகி பாபு, ரோபோ சங்கர், பசங்க பாண்டி மற்றும் ரவி மரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

க்ரிக்கஸ் சினி க்ரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள ஜெயில் படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் ரேமண்ட் டெரிக் படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜெயில் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் தற்போது வெளியானது. அசத்தலான ஜெயில் பட பாடல்கள் அடங்கிய ஆல்பம் (JUKEBOX) இதோ...