சிறந்த நடிகராக தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவரும் நடிகர் மாதவன் தற்போது இயக்குனராக, இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான திரு.நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் படமாக இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது

ராக்கெட்ரி-நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்க, அவரது மனைவி மீனா நாராயணன் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார்.ராக்கெட்ரி படத்திற்கு ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ட்ரை கலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து ராக்கெட்ரி படத்தை தயாரித்துள்ளன.

முன்னதாக கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட ராக்கெட்ரி திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் மாதவன் மற்றும் படக்குழுவினரை எழுந்து நின்று பாராட்டிய நிலையில், தொடர்ந்து தற்போது ரிலீசுக்கு பிறகும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத் ராக்கெட்ரி திரைப்படம் குறித்து மாதவன் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராக்கெட்ரி.. மாதவனின் மிகச்சிறந்த சித்தரிப்பு... முதல் படத்திலேயே என்ன ஒரு சிறப்பான இயக்கம்…மிகப்பெரிய வெற்றிக்காக மொத்த அணியினருக்கும் வாழ்த்துக்கள்!" என தெரிவித்துள்ளார். அனிருத்தின் அந்த பதிவு இதோ…
 

#Rocketry , an amazing depiction by @ActorMadhavan and what a directorial debut 🚀 Congratulations to the whole team for the huge success 🏅

— Anirudh Ravichander (@anirudhofficial) July 5, 2022