தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கி ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படங்கள் எடுத்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர்.கமல்ஹாசன் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தினை இயக்கி வந்தார் ஷங்கர்.

இந்த படத்தின் ஷூட்டிங் 2 வருடங்களாக தடைப்பட்டிருந்தது,நேற்று இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது.ரன்வீர் கபூர் நடிப்பில் அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்க தயாராகி வருகிறார்.இதனை தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் தயாராகி வரும் RC 15 படத்தினை இயக்கி வருகிறார்.

எப்போதும் ஒரு படத்தினை முடித்துவிட்டு அடுத்த படத்தினை தொடங்கும் ஷங்கர்,ஒரே நேரத்தில் இரண்டு படங்களை எப்படி சமாளிக்க போகிறார் என ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் இருந்தனர்.அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் படி ஷங்கர் ஒரு பதிவிட்டுள்ளார்.

இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே ஒரே நேரத்தில் தடையில்லாமல் நடத்த திட்டமிட்டுள்ளோம்,செப்டம்பர் முதல் வாரம் முதல் RC 15 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.ஷங்கர் எப்படி இரண்டு படங்களையும் நிறைவு செய்து வெளியிடப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.