தளபதி விஜயின் வாரிசு படத்தில் இணைந்த பீஸ்ட் பட பிரபலம் !
By Aravind Selvam | Galatta | August 25, 2022 14:24 PM IST

தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் வாரிசு.
தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.
தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் சரத்குமார்,பிரபு,பிரகாஷ்ராஜ்,ஜெயசுதா,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,ஷாம்,சங்கீதா,யோகி பாபு,சம்யுக்தா ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி செம வைரலாகி வந்தன.இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது,இந்த படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக பிரபல நடன இயக்குனர் ஜானி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே இவர் விஜயுடன் இணைந்த பீஸ்ட் படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Break time clicks from the sets of #Varisu shoot 💥✨️ pic.twitter.com/nzXKCrNpAU
— Jani Master (@AlwaysJani) August 24, 2022
Did Vijay and Shah Rukh Khan meet at the Jawan shooting? - Official Update here!
25/08/2022 06:04 PM
SHOCKING: GV Prakash's Pencil director passes away | film industry in mourning
25/08/2022 04:36 PM