ரஜினிகாந்த் & நெல்சனைத் தொடர்ந்து அனிருத்துக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்… தொடரும் ஜெயிலர் வெற்றி கொண்டாட்டம்! வீடியோ உள்ளே

ஜெயிலர் வெற்றிக்காக அனிருத்துக்கு கார் கொடுத்த கலாநிதி மாறன்,Producer kalanithi maaran gifted a porsche car to aniruth for jailer success | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து உலக அளவில் மெகா ஹிட் பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் இந்த இமாலய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் காசோலை வழங்கியதோடு சர்ப்ரைஸாக விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இந்த 2023 ஆம் ஆண்டில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் & அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிலான பெரும் வெற்றியை பெற தவறிய நிலையில் ரசிகர்களுக்கு சரியான ட்ரீட்டாக வெளிவந்த இந்த ஜெயிலர் திரைப்படம் கொண்டாட்டமாக அமைந்தது.

முதல் முறை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில், சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸானது.

ரிலீசான முதல் வாரத்திலேயே உலகம் முழுவதும் 375.40 கோடி ரூபாய் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெரிய சாதனையை படைத்த ஜெயிலர் திரைப்படம் வளைகுடா நாடுகளில் இதுவரை எந்த தென்னிந்திய திரைப்படமும் வசூலித்திராத அதிக வசூல் செய்து அதிரடி சாதனை படைத்தது. முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 525 கோடிக்கு மேல் வசதிக்கு இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறிய ஜெயிலர் திரைப்படம் தற்போது 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் முழு வசூல் மிகப்பெரிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே இந்த இமாலய வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 ரக காரை கலாநிதி மாறன் அவர்கள் பரிசளித்தார். தொடர்ந்து இயக்குனர் நெல்சன் அவர்களுக்கும் PORSCHE ரக கார் ஒன்றை பரிசளித்தார். இதனை அடுத்து இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கும் நிச்சயமாக கலாநிதி மாறன் அவர்கள் கார் பரிசளிப்பார் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. காரணம் படத்தில் இயக்குனர் நெல்சன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இருவருக்கும் இணையாக படத்தை தன் தோளில் சுமப்பது போல பின்னணி இசையாளும் பாடல்களாலும் பலம் சேர்த்தார் அனிருத். இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் அவர்களுக்கு விலை உயர்ந்த PORSCHE ரக கார் ஒன்றை கலாநிதி மாறன் அவர்கள் பரிசளித்திருக்கிறார். இந்த அழகிய தருணத்தின் வீடியோ இதோ…
 

To celebrate the humongous Blockbuster #Jailer, Mr. Kalanithi Maran presented the key of a brand new Porsche car to @anirudhofficial#JailerSuccessCelebrations pic.twitter.com/lbkiRrqv7B

— Sun Pictures (@sunpictures) September 4, 2023