சிலம்பரசன்TRன் பிரம்மாண்டமான ‘STR48’ பட கூலான டிஸ்கஷனில் இயக்குனர் தேசிங் பெரியசாமி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

STR48 பட டிஸ்கஷனில் சிலம்பரசன் உடன் தேசிங் பெரியசாமி,silambarasan tr and desingh periysamy in str48 discussions | Galatta

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்க, நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் STR48 திரைப்படத்தின் டிஸ்கஷனில் நடிகர் சிலம்பரசன்.TR உடன் இயக்குனர் தேசிங் பெரியசாமி இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டவர் நடிகர் சிலம்பரசன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெட் கார்டு, உடல் பருமன் என எதிர்மறை விமர்சனங்கள் தன்னை சூழ்ந்து கொண்ட நிலையில் அவை அனைத்தையும் உடைத்தெறிந்து முற்றிலும் வேறு ஒரு ஆளாக மாறி வந்து வேற லெவல் கம் பேக் கொடுத்தார் சிலம்பரசன்.TR. கிட்டத்தட்ட தன் உடல் எடையை பாதியாக குறைத்து ஈஸ்வரன் திரைப்படத்தில் புதிய கெட்டப்பில் வந்த சிலம்பரசன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 

அதைத்தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்த சிலம்பரசன் இதுவரை தான் நடித்த திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அந்த முத்து என்ற கதாபாத்திரத்திற்கு மொத்தமாய் மாறி மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தார். இந்த வரிசையில் கடைசியாக சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பத்து தல. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அவர்களின் நடிப்பில் வந்த கன்னட படமான மஃப்டி பட ரீமேக்காக சிலம்பரசன்.TR நடித்த பத்து தல படமும் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இந்த வரிசையில் அடுத்ததாக, நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் STR48 திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான இயக்குனர் தேசிங் பெரியசாமி, சூப்பர் ஸ்டாருக்காக எழுதிய ஒரு அதிரடியான கதை தான் STR48 படத்தின் கதை என்றும் இதில் சிலம்பரசன் நடிப்பதற்காக சிறு சிறு மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் STR48 திரைப்படத்தை தயாரிக்கிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் STR48 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரம்மாண்டமான பீரியட் ஆக்சன் படமாக STR48 திரைப்படம் தயாராக இருப்பதாக தெரிகிறது. எனவே இதற்கான பணிகளுக்காக தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக சிலம்பரசன்.TR சமீபத்தில்  லண்டன் சென்று வந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் சிலம்பரசன்.TR உடன் இயக்குனர் தேசிங் பெரியசாமி டிஸ்கஷனில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை வைத்துள்ளனர். இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இயக்குனர் தேசிங் பெரியசாமி, "POSITIVE MIND POSITIVE VIBES 👍🏾 #STR48 #BloodandBattle" எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ...
 

Positive Mind Positive Vibes👍🏾#STR48 #BloodandBattle pic.twitter.com/AN5KWM9mHY

— Desingh Periyasamy (@desingh_dp) September 4, 2023