எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் மக்களை மகிழ்விக்க வெளிவருகின்றன.

முதலாவதாக  மறைந்த முன்னணி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி & டாப்ஸி நடித்த அனபெல் சேதுபதி திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார்-இல் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீசாகிறது.

அடுத்ததாக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் சன் டிவியில் நேரடியாக ரிலீசாகிறது. தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் விஜய்சேதுபதி ,பார்த்திபன், ராஷி கண்ணா, சத்யராஜ் ,மஞ்சிமா மோகன் , காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்  .

துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தின் புதிய பாடல் வீடியோ இன்று வெளியானது. அரசியல் என்னும் அந்த அமர்க்களமான புதிய பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழலாம்.